Abstract:
சம்ஸ்கிருத காவ்யவியல் கோட்பாடுகளில் ஆரம்பக்கோட்பாடுகளில் ஒன்றாக விளங்குவது அலங்காரக்கோட்பாடு. இலக்கியம் படைப்பவனுக்கு பொருள் வெளியீட்டு உத்தியையும், இலக்கியம் சுவைப்பவனுக்கு பொருள் கொள்ளும் உத்தியையும் அளிப்பதால் அணியிலக்கணம் இலக்கியத்தில் தனியிடம் பெறுகிறது. உபமையில் ஒப்பற்றவன காளிதாசன். 'உபமா காளிதாசஸ்ய' என்பது கவியுலக வழக்கு. அவரது ச்ரவிய காவியங்களான மகா காவியங்களும், கண்டகாவியங்களும் த்ருஸ்ய காவியங்களான நாடகங்களும் சொல்லணி பொருளணிகளால் அலங்கரிக்கப்பட்டவை. அவரது திருஷ்யகாவியமான அபிக்ஞானசாகுந்தலம் எவ்வாறு சொல்லணிகளாலும், பொருளணிகளாலும் அலங்கரிக்கப்படுகின்றன என்பதை நோக்குவதே இவ்வாய்வின் நோக்கமாகும்.