Abstract:
இலங்கையில் போர்த்துக்கேயரின் ஆட்சி நிலவியபோது மறைபரப்பாளர் கத்தோலிக்க மறையை மக்களிடையே பரப்ப வேண்டும் என்ற முனைப்புடன் செயற்பட்டனர். மறையை பரப்பும் செயற்பாடுகளில் ஈடுபட்ட அவர்கள் அதற்கென கையாண்ட ஊடகங்களுள் இலக்கியமும் சிறப்பிடம் பெறுகின்றது. கிறிஸ்தவ மறையைச் சாதாரண பொதுமக்கள் மத்தியிலே முன்னெடுத்த மறைபரப்பாளர், கத்தோலிக்க மறைசார்ந்த கருத்துக்களை நாடகப் பாங்கில் வெளிப்படுத்தி, மக்களை இலகுவில் கவரும் வகையில் பள்ளு போன்ற இலக்கியங்களைத் தோற்றுவித்துள்ளனர். உழவுத் தொழிலில் ஈடுபட்டவர்களின் வாழ்வில் நிகழும் நிகழ்ச்சிகளை எளிமையாகவும்> இனிமையாகவும்> சுவைக்கத்தக்க விதத்திலும் கூறுவனவாக இப் பள்ளு இலக்கியங்கள் காணப்படுகின்றன. இப் பின்னணியில் இலங்கையில் தோற்றம் பெற்ற ஞானப்பள்ளு இலக்கியத்தில் வரும் பாத்திரங்களூடாகக் கத்தோலிக்க மறைசார் இறையியல் கருத்துக்கள் சிறப்பாக முன்வைக்கப்பட்டுள்ளதுடன் திருவிவிலியத்தின் பழைய ஏற்பாட்டின் சில நிகழ்வுகளையும் இவ் இலக்கியம் எடுத்துரைக்கின்றது. ஞானப்பள்ளு இலக்கியம் குறித்து சில கட்டுரைகள் வெளிவந்திருப்பினும் அக்கட்டுரைகளில் ஞானப்பள்ளு வெளிப்படுத்தும் பழைய ஏற்பாட்டு நிகழ்வுகள் குறித்த விளக்கத்தைப் பெறமுடியாமை ஆய்வு பிரச்சனையாக காணப்படுகின்றது. எனவே இவ் ஆய்வானது இலங்கையில் போர்த்துக்கேயரின் ஆட்சிக்காலத்தில் தோன்றிய ஞானப்பள்ளு இலக்கியம் வெளிப்படுத்தும் பழைய ஏற்பாட்டு நிகழ்வுகளை இனங்கண்டு ஆய்வுக்கு உட்படுத்தி> அவற்றின் இறையியல் சிறப்பையும் முக்கிய விடயங்களையும் ஆவணப்படுத்துவதாக அமைகின்றது. ஞானப்பள்ளு இலக்கியத்தில் பழைய> புதிய ஏற்பாடுகளை மையப்படுத்திய பல விடயங்கள் முன்வைக்கப்பட்டிருப்பினும் ஆய்வின் வரையரையைக் கருத்திற்கொண்டு இலக்கியம் முன்வைக்கும் பழைய ஏற்பாட்டு நிகழ்வுகளே ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. மேலும் கிறிஸ்தவ இலக்கியங்கள் பல மறக்கப்பட்டும்> மறைந்துள்ள நிலையில் இத்தகைய இலக்கியங்களைப் பதிவு செய்து> இவ் இலக்கியங்கள் தொடர்பான திறனாய்வுக் கருத்துக்களை விரிவாக இன்றைய தலைமுறையினருக்கு எடுத்துரைப்பதுடன்> கிறிஸ்தவ தமிழ் இலக்கிய ஆய்வுப் பரப்பை வளப்படுத்தி> வலுவூட்டுதல் இவ் ஆய்வின் நோக்கங்களாகும். ஆய்வின் பயன்பாடாக செய்யுள் வடிவில் காணப்படும் ஞானப்பள்ளு இலக்கியத்திலுள்ள ஆழ்ந்த அறிவை இலக்கிய உலகத்திலும்> இறையியல் உலகத்திலும் உறுதியுடன் பதிவு செய்தலாக அமைகின்றது. ஆய்வுக்கென மூல நூலான ஞானப்பள்ளு இலக்கிய செய்யுள்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு அவற்றின் உரைநடை விளக்கங்களைப் பெற்று> பெறப்;பட்ட தரவுகளை விவிலிய ஆதாரங்களுடன் திறனாய்வுக்கு உட்படுத்தி> பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.