dc.description.abstract |
திருவிவிலியத்தில் இயேசுகிறிஸ்துவையும், அவரது போதனைகளையும் உள்ளடக்கிய ஒரே நற்செய்தியைக் கொண்ட நான்கு நூல்கள் காணப்படுகின்றன. நற்செய்தியாளர்கள் இயேசு இவ்வுலகில் வாழ்ந்த முப்பத்து மூன்று ஆண்டுகளை இருதொகுதிகளாகப் பிரித்து, முன் முப்பது வருடங்களை ஒரு தொகுதியாகவும், இறுதி மூன்று வருடங்களை ஒரு தொகுதியாகவும் குறிப்பிடுகின்றார்கள். இதில் முன் முப்பது வருடங்களைக் குறிப்பிடுகையில், இயேசுவின் குழந்தைப் பருவத்திலிருந்து பன்னிரண்டு வயது வரையான காலப்பகுதியில் நடைபெற்ற சம்பவங்களில் சிலவற்றையே முன்வைக்கிறார்கள். பன்னிரண்டு வயதுக்குப் பிற்பட்ட பதினெட்டு ஆண்டுகளில் நடைபெற்ற சம்பவங்களை நற்செய்தியாளர்கள் முன்வைக்கவில்லை. இறுதி மூன்று ஆண்டுகள் இயேசு தம்மை வெளிப்படுத்திய காலமாகக் காணப்படுகிறது. இங்கு மத்தேயு, லூக்கா நற்செய்தியாளர்கள் இயேசுவின் குழந்தைப் பருவத்தில் இடம்பெற்ற சம்பவங்களில் ஒரு சிலவற்றைத் தவிர வேறு சம்பவங்களை ஆதாரப்பூர்வமாக முன்வைக்கவில்லை. இவ் ஆய்வு குழந்தைப் பருவம் குறித்து இவ்விரு நற்செய்தியாளர்களும் முன்வைக்கும் விடயங்கள் ஆழமாக ஆய்வு செய்யப்பட்டு, அவற்றில் பொதிந்துள்ள முக்கிய விடயங்களை வெளிக் கொண்டுவருவதுடன், ஆய்வானது பின்வரும் நோக்கங்களைக் கருத்திற் கொண்டு மேற்கள்ளப்பட்டுள்ளது. திருவிவிலியத்தில் புதிய ஏற்பாட்டிலுள்ள நான்கு நற்செய்தி நூல்களில் மத்தேயு, லூக்கா ஆகியோர் எழுதிய நற்செய்தி நூல்களிலே இயேசுவின் குழந்தைப்பருவம் குறித்த விடயங்களை முன்வைக்கின்றன என்பதையும், இவ் இரு நற்செய்தியாளர்களும் இவ்விடத்தை முன்வைக்கும் அமைப்பு முறையில், சம்பவங்களிலும் ஒற்றுமை, வேற்றுமைகள் காணப்படுகின்றன என்பதையும் தெளிவுபடுத்துவதாகும். மூல நூலான திருவிவிலியத்திலுள்ள மத்தேயு, லூக்கா நற்செய்திகளில் இருந்தும், விவிலிய விளக்கவுரைகள், துணை நூல்கள் போன்றவற்றிலிருந்தும் இயேசுவின் குழந்தைப்பருவம் குறித்து முன்வைக்கப்பட்ட விபரிப்பின் இலக்கியத் தன்மைகளை ஆய்வு செய்து, அவை விமர்சன ஆய்வுக்குட்படுத்தப்பட்டு, தரவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டு, இரு நற்செய்தி நூல்களிலும் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் ஒப்பீட்டு நிலையில் ஆய்வுக்கு உட்படுத்தப்படவுள்ளன.
மத்தேயு, லூக்கா நற்செய்தியாளர்கள் இயேசுவின் குழந்தைப் பருவத்தைக் குறிப்பிடுகையில் இந்நிகழ்வை விபரிக்கும் சூழல், முன்வைக்கும் முறை என்னும் சில விடயங்களில் வேறுபட்டுள்ளார்கள் என்பதும், இவ்வாறு வேற்றுமைகள் தோன்ற நற்செய்தி தோன்றிய பின்னணி, அதனைப் பெற்றுக் கொண்ட சமூகம் என்பன சில காரணிகளாக அமைகின்றன என்பதும் இவ் ஆய்வின் முடிவுகளாக முன்வைக்கப்படுகின்றன. |
en_US |