dc.description.abstract |
குறித்த ஒரு இனம் தன்னடையாளத்தைத் தொலைக்காது இருப்பதற்கு தனக்கான மொழிஇ சமயம்இ தத்துவம், கலை, இலக்கியம், பண்பாடு உள்ளிட்டவற்றைப் பாதுகாத்தல் அவசியமாகும். காலனித்துவக் கால ஒடுக்குமுறைக்குள் இருந்து சைவத்தையும் தமிழையும் மறுமலர்ச்சியடையச் செய்தவராக ஆறுமுகநாவலர் அடையாளப்படுத்துகின்றார். அவர் இவற்றைப் பாதுகாக்க எடுத்த முயற்சிகளுள் மொழி இலக்கணத்தைப் பாதுகாத்தலும் புதுப்பித்தலுமாகும். தமிழ் இலக்கிய மரபை மக்கள் புரிந்து கொள்ளவும் அழியவிடாது பேணவும் உரைநடையாக்கம் செய்த அதே வேளை மரபு வடிவங்கள் சிதையாவண்ணம் அவற்றைப் புரிந்து கொள்ள இலக்கண நூல்களை பதிப்பித்தும், எளிய உரைகளை எழுதியும் புதுவது ஆக்கியும் தன் பங்களிப்பைச் செய்தார். நவீன எமுத்து முறைகள் உரிய வகையில் பயணிக்கத்தக்க வகையில் இக்கொள்கைகளை பழமையும் புதுமையும் கொண்டு உருவாக்கினார். நாவலருடைய இலக்கணக் கொள்கையையும் அதன் வழி சைவத்தமிழ் வளர்ச்சியில் அவருடைய வகிபாகத்தை புரிந்து கொள்வதுமே ஆய்வின் நோக்கமாகும். தமிழ் இலக்கணப்பரப்பில் நாவலரின் மரபு பேண்தன்மையையும் மாற்றக் கொள்கையும் எவ்வளவு தூரம் பொருத்தமானது, காலத்துக்கு ஏற்றது என்பதே ஆய்வுப்பிரச்சனையாகக் கொள்ளப்படுகிறது. இதற்கு வரலாற்று முறை, விவரணம், பகுப்பாய்வு என்பன ஆய்வு முறையியல்களாகக் கொள்ளப்படுகின்றன. |
en_US |