dc.description.abstract |
காலனித்துவ கால ஈழத்து தமிழ், சைவ மறுமலர்ச்சியில் முக்கிய பங்காற்றியவராக ஆறுமுகநாவலர் கருதப்படுகிறார். பதிப்பியல், நூலாக்கவியல், உரைநடையியல், செய்யுளியல், பிரசங்கவியல், கல்வியியல், சமயவியல், தத்துவவியல், இலக்கணவியல் எனப் பல துறைகள் சார்ந்து அவர் இயங்கியுள்ளார். சமஸ்கிருதம், ஆங்கிலம், தமிழ் என மும்மொழிப் புலமையாளராகத் திகழ்ந்துள்ளார். ஈழத்தில் மட்டுமன்றி தமிழகத்திற்கும் பயணித்து அங்கும் பல பணிகள் புரிந்துள்ளார். தமிழ் உரைநடை வளர்ச்சியில் அவரின் பங்களிப்பை மதித்து ‘உரை நடை கைவந்த வல்லாளர்’ என எடுத்துரைக்கும் மரபு காணப்படுகின்றது. அவர் அக்காலப்பகுதியில் கையாண்ட மொழிநடை குறித்து ஆராய்வதே இந்த ஆய்வின் நோக்கமாகும். ‘நாவலரின் மொழி நடை தற்காலத்துக்கும் பொருத்தமானது’ என்பதே ஆய்வின் கருதுகோள். இங்கு ஆய்வுப் பிரச்சினையாக நவீன மொழியியலாளர்கள் இருவருடைய நாவலரின் மொழிநடை குறித்த கருத்தியல்கள் பொருத்தமானவையா என்பதே எடுத்தாளப்பட்டுகிறது. இதற்கு ஒப்பீடு, விவரணம், வரலாற்றுமுறை முதலான ஆய்வு முறையியல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. |
en_US |