dc.description.abstract |
சைவ சமய வரலாற்றில் தமிழ் பக்தி இலக்கியங்களுக்கு தனியிடம் வழங்கப்படுகிறது. சித்தாந்த சாத்திரங்களுக்கு – அவற்றின் உருவாக்கத்துக்கான முக்கோளாக பக்திஇலக்கியங்கள் திகழ்ந்தன என்றே கருதப்படுகிறது. அந்த நாயன்மார் பாடல்களைத் தேடித் தொகுத்து அளிக்கை செய்தவராக நம்பியாண்டார் நம்பி கருதப்படுகின்றார். பல்வேறு நூலாக்கப் பணிகளிலும் அவர் ஈடுபடுகின்றார். இவை இரண்டும் இங்கு ஆய்வுப் புலங்களாக எடுத்துக் கொள்ளப்படுகின்றன. திருமுறைகண்டபுராணம் முன்வைக்கின்ற திருமுறை தொகுத்த வரலாற்றை வாய்ப்பாட்டு முறையில் சொல்லப்படுவதை இவ்வாய்வு கேள்விக்குள்ளாக்கி மறுவாசிப்புச் செய் கின்றது. நம்பியாண்டார் நம்பி, சுந்தரரின் திருத்தொண்டர் தொகையை மூலமாகக் கொண்டெழுதிய திருத்தொண்டர் திருவந்தாதியை அ.ச.ஞானசம்பந்தன் செய்த குறை மதிப்பீட்டை இந்த ஆய்வு மறுவாசிப்புச் செய்கின்றது. இவ்விரு ஆய்வுப்புலன்களின் வழி நம்பியின் சமய நோக்கு இங்கு மதிப்பீடு செய்யப்படுகின்றது. இதற்கு ஒப்பீடு, பகுப்பாய்வு, வரலாறு, விவரணம் முதலான ஆய்வு முறையியல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. |
en_US |