Abstract:
சாஸ்திரீய மொழியாகி சம்ஸ்கிரு மொழியின் இலக்கியவளம் ரசனை மிக்கது. சம்ஸ்கிருத
காவியவியலாளர்கள் இலக்கியங்களின் சிறப்பம்சங்களை விளக்கி நிற்கின்றனர். உயர்ந்த தரம்மிக்க சம்ஸ்கிருத இலக்கியங்களை அறிந்து கொள்ள மிகவும் உதவிபுரிவன உரைகள் ஆகும். இவ்வுரை ‘வியாக்யானம்’ என்று அழைகக் ப்படும். பெயரிட்டு உரையெழுதும் சிறப்பும், உரைகளுக்கு உரையெழுதும் சிறப்பும் சம்ஸ்கிருத மொழிக்குண்டு. அவ்வகையில் மஹாகாவ்ய இலக்கியங்களுக்கு உரையெழுதி உயர்வு பெற்றவர் மல்லிநாதர்
ஆவார். உரையாசிரியர்களது உரைவளமும் இலக்கிய வரலாற்றில் அவர்களுக்கு உரிய இடமளிக்கப்பட
வேண்டிய தேவையும் உணர்த்தப்படுகிறது.