dc.description.abstract |
ஹென்றி அல்பிரட் கிருஷ்ணபிள்ளை அவர்களால் படைக்கப்பட்ட இரட்சணிய யாத்திரிகம் என்னும் நூலானது திருப்பயணியின் முன்னேற்றம் என்னும் நூலை முதன் நூலாகக் கொண்டு எழுதப்பெற்றுள்ளது. தமிழ்க் கிறிஸ்தவ பெருங்காப்பிய இலக்கிய வகைக்குள் உள்ளடக்கப்படும் இவ் இலக்கியத்தில் போற்றுதற்குரிய தமிழ் மொழி இலக்கியமான திருக்குறளின் செல்வாக்கும் காணப்படுகின்றதென்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். திருவிவிலியத்தின் பழைய, புதிய ஏற்பாட்டுக் கருத்துக்களை மையப்படுத்திய இரட்சணிய யாத்திரிகத்தில் செல்வாக்குச் செலுத்தும் திருக்குறளின் அறத்துப்பால் கருத்துக்களை வெளிக்கொணர்ந்து, அவற்றை ஆவணப்படுத்தும் நோக்குடன் இவ் ஆய்வு மேற்கொள்ளப்படுகின்றது. இதனடிப்படையில் இரட்சணிய யாத்திரிகமும்; திருக்குறளின் அறத்துப்பால் பகுதியும் ஒப்புநோக்கு அடிப்படையில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, திருக்குறளின் அறத்துப்பால் கருத்துக்களை இரட்சணிய யாத்திரிகம் எவ்வாறு எடுத்துரைக்கின்றது என்னும் விடயம் வெளிக்கொணரப்பட்டு, பெறப்பட்ட தரவுகள் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
திறவுச் சொற்கள்: இரட்சணிய யாத்திரிகம், திருக்குறள், அறத்துப்பால் |
en_US |