DSpace Repository

தமிழ் மொழியின் இருநிலைத் தன்மை : இறந்தகால தெரிநிலை வினைமுற்றுக்களை அடிப்படையாகக் கொண்ட விளக்கமுறை மொழியியல் ஆய்வு

Show simple item record

dc.contributor.author Sujiththa, K.
dc.date.accessioned 2021-07-09T05:49:10Z
dc.date.accessioned 2022-07-07T05:49:36Z
dc.date.available 2021-07-09T05:49:10Z
dc.date.available 2022-07-07T05:49:36Z
dc.date.issued 2021
dc.identifier.issn 2783-8773
dc.identifier.uri http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/3395
dc.description.abstract மொழியின் இருநிலைத் தன்மை அல்லது இரட்டை வழக்கு (னுபைடழளளயை) பற்றிய படிப்பு சழுதாய மொழியியலின் ஒரு அங்கமாக விளங்குவதுடன் தமிழ் மொழியில் தொல்காப்பியர் காலந்தொட்டு வழக்கில் இருந்து வருவதாக நம்பப்படுகின்றது. சமுதாய மொழியியலாளரினால் 'தமிழ் மொழி மிகக் கடுமையான இருநிலைத் தன்மை மொழி' (ர்iபாடல னுபைடழளளiஉ) என்று கூறப்படுகின்றது. தமிழ் மொழியின் தெரிநிலைவினைச் சொற்களின் இருநிலைத் தன்மை பற்றிய ஆய்வும் இவ் உண்மையைப் புலப்படுத்துகின்றது. தமிழ் மொழியின் இரட்டை வழக்குப் பற்றிய ஆய்வுகள் பெரும்பாலானவை சமுதாய மொழியியல் அடிப்படையில் அமையப்பெற்றிருப்பதுடன் ஒரு சில விளக்கமுறை அடிப்படையிலும் ஆராயப்பட்டுள்ளன. இவ் ஆய்வானது யாழ்ப்பாணப் பேச்சு வழக்கில் பயின்று வருகின்ற தெரிநிலை வினைச் சொற்களின் இறந்தகால இடைநிலைகளின் ஒலியமைதியினை, இரட்டை வழக்கினை வரையறை செய்யும் முக்கிய கூறான இலக்கிய வழக்கிலிருந்து வேறுபடுத்தி விளக்கமுறை மொழியியல் அடிப்படையில் ஆராய்வதனையே நோக்கமாகக் கொண்டுள்ளது. தமிழ் மொழியின் இரு வழக்குகளிலும் இறந்தகால வினைச் சொற்கள் குறிப்பாக செயற்படுபொருள் குன்றியவினை மற்றும் செயப்படுபொருள் குன்றாதவினை ஆகியன வௌ;வேறு ஒலியமைதியைக் கொண்ட இடைச்சொற்களை ஏற்று மொழியில் பயின்று வருவதை அவதானிக்க முடிந்தது. அத்துடன் அவ் வினைச்சொற்கள் ஏற்கும் திணை, பால், எண், இட விகுதிகளும் இரு வழக்குகளிலும் வேறுபடுகின்றன. இவ் ஆய்வில் வினைச் சொற்கள், அவற்றின் மொழி ஈறுகள் மற்றும் அவை ஏற்கும் கால இடைநிலைகளின் அடிப்படையில் பாகுபடுத்தப்பட்டுள்ளன. தமிழ் மொழித் தெரிநிலை வினைச் சொற்களின் இத்தகைய இரட்டை வழக்குநிலையானது தாய்மொழியாகத் தமிழ் மொழி கற்போருக்கும் இரண்டாம் மொழியாகத் தமிழ் கற்போருக்கும் பெரும் பிரச்சனையாக அமைவதனை அறியமுடிகின்றது. எனவே தமிழ் பயிற்றுவிக்கும் மொழியாசிரியர்களும் பாட நூலாக்கத்தில் ஈடுபடும் தமிழறிஞர்களும் தமிழ் மொழித் தெரிநிலை வினைச் சொற்களின் இரட்டை வழக்கு பற்றிய முழுமையான விளக்கத்தினைப் பெற்று தமிழ் மொழிப் பாடநூல்களில் அவற்றுக்கான இலக்கணத்தினையும் உள்ளடக்குவதன் அவசியம் குறித்து சிந்திப்பதுடன், பேச்சு வழக்கு தொடர்பான அவர்களது மனப்பாங்குகளிலும் மாற்றத்தினை ஏற்படுத்த வேண்டும் என்பதனை இவ் ஆய்வு பரிந்துரை செய்கின்றது. en_US
dc.language.iso other en_US
dc.publisher University of Jaffna en_US
dc.subject இரட்டை வழக்கு en_US
dc.subject இலக்கிய வழக்கு en_US
dc.subject இறந்தகால இடைநிலை பேச்சு வழக்கு en_US
dc.subject தெரிநிலை வினைமுற்று en_US
dc.title தமிழ் மொழியின் இருநிலைத் தன்மை : இறந்தகால தெரிநிலை வினைமுற்றுக்களை அடிப்படையாகக் கொண்ட விளக்கமுறை மொழியியல் ஆய்வு en_US
dc.type Article en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record