DSpace Repository

கர்நாடக இசைப் பயிற்சியில் கலப்பொட்டுக் கற்றல், கற்பித்தல் அணுகுமுறைகள்

Show simple item record

dc.contributor.author Vishaliny, S.
dc.date.accessioned 2026-10-05T07:30:37Z
dc.date.available 2026-10-05T07:30:37Z
dc.date.issued 2026
dc.identifier.uri http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/13146
dc.description.abstract பாரம்பரியக் கர்நாடக இசைக் கல்வியானது தொடக்க காலத்தில் குருகுல முறையை மட்டும் அடிப்படையாகக் கொண்டே வளர்க்கப்பட்டது. பிற்காலத்தில் குருகுலமுறை அல்லது நேரடி வகுப்பறைப் பயிற்சியை மட்டுமே முதன்மையாகக் கொணடதாக மாற்றம் பெற்றது. இலத்திரனியல் வசதிகள் அதிகரித்திருக்கும் தற்காலத்தில் பல்வேறு விதமான கற்றல் முறைகளைக் கொண்டதாக இசைக் கல்வியானது மாற்றம் பெற்று வருகின்றது. நவீன தொழில்நுட்ப வளர்ச்சியும் இலத்திரனியல் ஊடகங்களின் அசுர வளர்ச்சியும் பரவலாக இணைக்கப்பட்டுள்ள இன்றைய காலகட்டத்தில், பாரம்பரியமான நேரடிப் பயிற்சி, இணையவழிக் கற்றல் முறைகளைத் திறம்பட ஒன்றிணைத்து வழங்கும் ‘கலப்பொட்டுக் கற்றல், கற்பித்தல் அணுகுமுறைகள்” போன்றவை இசை பயிலும் மாணவர்களின் ஈடுபாட்டையும் ஒட்டுமொத்த கற்றல் திறனையும் எவ்வாறு மேம்படுத்துகின்றது என்பதைத் இக்கட்டுரை ஆராய்கின்றது.கலப்பொட்டுக் கற்றல் கற்பித்தல் அனுகுமுறை என்பது பாரம்பரியமான நேரடி வகுப்பறைப் பயிற்சியுடன் நவீன எண்ணிம அல்லது இணையவழிக் கற்றல் முறைகள் இரண்டையும் ஒன்றிணைத்து வழங்கும் ஒரு நவீன கல்வி முறையாகும். இன்றைய நவீன உலகில் இந்த அணுகுமுறையானது தவிர்க்க முடியாத ஒன்றாகவும் காணப்படுகின்றது. இக்கலப்பொட்டுக் கற்பித்தல் அணுகுமுறையானது பாரம்பரிய இசை முறைகளின் தனித்துவத்தையும் செழுமையையும் குறைக்காமல், மாணவர்களுக்குச் சுயாதீனமான, நெகிழ்வான கற்றல் அனுபவத்தை வழங்குவதுடன், ஆசிரியர், மாணவர் இடையேயான ஆக்கபூர்வமான தொடர்பை மேலும் ஆழமாக வலுப்படுத்துகிறது. மேலும், மாணவர்களின் தனிப்பட்ட இசைத் திறமைகளை வெளிக்கொணர்வதில் இந்த நவீன கலப்பு முறை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த ஆய்வானது விளக்க முறை, பகுப்பாய்வு, விவரண ஆய்வு முறைகளை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்படுகின்றது. இதில் கர்நாடக இசை பயிலும் மாணவர்களிடம் சேகரிக்கப்படும் வினாப் பட்டியல், நேரடி வகுப்பறை அவதானிப்பு ஆகியவற்றின் மூலம், பாரம்பரியக் கற்றல் முறைகளுக்கும் கலப்பொட்டுக் கற்றல் முறைகளுக்கும் இடையே உள்ள மாணவர் ஈடுபாடு சார்ந்த வேறுபாடுகள் ஆழமாகப் பகுப்பாய்வு செய்யப்பட்டு, குறிப்பாக இலத்திரனியல் இசைப்பதிவுகள், மென்பொருட் கருவிகள், காணொளிகள், இசை வகுப்புகள், மாணவர்களின் சுருதி சுத்தம், தாள உணர்வு, கற்பனைத்திறன், மனப்பாடத் திறன் ஆகியவற்றில் எந்தளவிலான ஆக்கபூர்வமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றது என்பதை இக்கட்டுரை விரிவாக ஆராய முற்படுகின்றது. மேலும், நேரலை, நேரடி வகுப்புகளின் சமச்சீரான ஒருங்கிணைப்பு மூலம் மாணவர்கள் தங்களின் இசைப் பயிற்சிகளை எங்கிருந்தும், எப்போதும் எளிதாக அணுகி மீளாய்வு செய்ய ஏதுவாக அமைகிறது. கர்நாடக இசை கற்பித்தலின் பாரம்பரியத் தன்மை குன்றாமல் பாதுகாக்கும் அதே வேளையில், சமகால நவீன கல்வித் தேவைகளுக்கு ஏற்ப கலப்பொட்டுக் கற்றல் மாதிரியை பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களில் எவ்வாறு வெற்றிகரமாக ஒருங்கிணைக்கலாம் என்பதற்கான பரிந்துரைகளையும் இவ்வாய்வு முன்வைக்க முயலும். en_US
dc.language.iso other en_US
dc.publisher Sir Ponnambalam Ramanathan Faculty of Visual and Performing Arts University of Jaffna en_US
dc.subject பாரம்பரியக் கற்றல் en_US
dc.subject கர்நாடக இசை en_US
dc.subject நவீன அணுகுமுறை en_US
dc.subject கலப்பொட்டுக் கற்றல் en_US
dc.subject இசைக்கல்வி en_US
dc.title கர்நாடக இசைப் பயிற்சியில் கலப்பொட்டுக் கற்றல், கற்பித்தல் அணுகுமுறைகள் en_US
dc.type Conference paper en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record