DSpace Repository

ஓவியம், வரைகலை மற்றும் அச்சுப்பதிப்புக்கலை மாணவர்களிடையே நச்சுத்தன்மை கொண்ட கலை உருவாக்கப் பொருட்களும், மூலப்பொருட்களும் குறித்த விழிப்புணர்வும் பாதுகாப்பு நடைமுறைகளும்: சேர் பொன்னம்பலம் இராமநாதன் காண்பிய ஆற்றுகைக் கலைகள் பீட ஓவிய, சிற்பத்துறையில் ஓர் ஆய்வு

Show simple item record

dc.contributor.author Boopalan, L.
dc.date.accessioned 2026-10-05T07:26:00Z
dc.date.available 2026-10-05T07:26:00Z
dc.date.issued 2026
dc.identifier.uri http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/13145
dc.description.abstract ஓவியம், வரைகலை, அச்சுப்பதிப்பு பயிற்சியின்போது எண்ணெய் வர்ணங்கள், இரசாயன கரைப்பான்கள், மை, வரைதல் ஊடகங்கள், இரசாயன திரவங்கள், தெளிப்பு பிக்சேட்டிவ்கள் (Spray Fixatives) போன்ற கலை மூலப்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை நீண்டகால சுவாசக் கோளாறுகள், தோல் பாதிப்புகள் மற்றும் கண் எரிச்சல் உள்ளிட்ட உடல்நல அபாயங்களை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை என அறியப்பட்ட உண்மையாக இருந்தும், ஓவிய, வரைகலை மற்றும் அச்சுப்பதிப்பு கல்வியில் இத்தகைய நச்சுத்தன்மை கொண்ட பொருட்களைப் பயன்படுத்தும் மாணவர்களிடையே அவற்றின் உடல்நல அபாயங்கள் குறித்த விழிப்புணர்வும் நடைமுறைகளும் எந்த அளவிற்குப் பின்பற்றப்படுகின்றன என்பது தொடர்பான ஆய்வுகள் இலங்கை பல்கலைக்கழக சூழலில் மிகக் குறைவாகவே காணப்படுகின்றன. இக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இதன் முதன்மை நோக்கங்களாக ஓவிய, வரைகலை, அச்சுப்பதிப்புக்கலை மாணவர்களிடையே நச்சுப் பொருட்கள் தொடர்பான அறிவு எந்த அளவில் உள்ளது என்பதை மதிப்பிடுதல், கலைக்கூட சூழலில் அவர்கள் உண்மையாகப் பின்பற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை (முகக்கவசம், கையுறை, காற்றோட்டம் போன்றவை) கண்டறிதல், மற்றும் அறிவுக்கும் நடைமுறைக்கும் இடையே காணப்படும் இடைவெளியை ஆராய்தல் ஆகியவை கொள்ளப்படுகின்றன. இத்துடன், மாணவர்கள் அதிகமாகப் பயன்படுத்தும் நச்சுத்தன்மை கொண்ட பொருட்களை அடையாளம் காணுதல், இரசாயன பொருட்களின் சேமிப்பு மற்றும் கழிவகற்றல் நடைமுறைகளைப் பரிசீலித்தல் ஆகியனவும் இவ்வாய்வின் துணை நோக்கங்களாக அமைகின்றன. இதற்காக, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக, சேர் பொன்னம்பலம் இராமநாதன் காண்யிப ஆற்றுகைக்கலைகள் பீடத்தில் ஓவிய, சிற்பத்துறையில் இளங்கலை பயிலும் மாணவர்களில் எழுமாற்றகாத் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களிடையே கட்டமைக்கப்பட்ட கேள்வித்தாளின் மூலம் தரவுகள் சேகரிக்கப்பட்டன. விளக்க முறை அளவு ஆய்வு முறையில் பெறப்பட்ட தரவுகள் விளக்கப் புள்ளிவிபரங்கள், கருதுபொருள் அடிப்படையிலான பகுப்பாய்வு மூலம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. ஆய்வின் கண்டுபிடிப்பின் சாரமாக, தற்போதைய பாடத்திட்டத்தில் நச்சுப்பொருட்கள், பாதுகாப்பு நடைமுறைகள் முறையாகக் குறிப்பிடப்படாமையும் மாணவர்களின் செய்முறை வழக்கங்களில் உள்ள கவனயீனமும் அறியப்பட்டன. இவ்வாய்வு ஓவியம், வரைகலை மற்றும் அச்சுப்பதிப்பு கல்வியில் உடல்நலப் பாதுகாப்பு தொடர்பான தற்போதைய நிலையை வெளிப்படுத்துவதோடு மட்டும் நின்றுவிடாது, பாதுகாப்பு விழிப்புணர்வை மேம்படுத்துவதற்கான கல்வி, நிறுவனம் சார்ந்த பரிந்துரைகளையும் முன்வைக்கின்றது. en_US
dc.language.iso other en_US
dc.publisher Sir Ponnambalam Ramanathan Faculty of Visual and Performing Arts University of Jaffna en_US
dc.subject உடல்நல பாதுகாப்பு en_US
dc.subject கலைக்கூட பாதுகாப்பு en_US
dc.subject நச்சுப் பொருட்கள் en_US
dc.subject விழிப்புணர்வு en_US
dc.subject பாதுகாப்பு நடைமுறைகள் en_US
dc.title ஓவியம், வரைகலை மற்றும் அச்சுப்பதிப்புக்கலை மாணவர்களிடையே நச்சுத்தன்மை கொண்ட கலை உருவாக்கப் பொருட்களும், மூலப்பொருட்களும் குறித்த விழிப்புணர்வும் பாதுகாப்பு நடைமுறைகளும்: சேர் பொன்னம்பலம் இராமநாதன் காண்பிய ஆற்றுகைக் கலைகள் பீட ஓவிய, சிற்பத்துறையில் ஓர் ஆய்வு en_US
dc.type Conference paper en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record