DSpace Repository

இசை கற்பித்தலில் மொழியியலின் அவசியம்

Show simple item record

dc.contributor.author Vargikan, K.
dc.date.accessioned 2026-10-05T07:05:47Z
dc.date.available 2026-10-05T07:05:47Z
dc.date.issued 2026
dc.identifier.uri http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/13143
dc.description.abstract தமிழர் பண்பாட்டில் மொழிக்கும் இசைக்கும் இடையிலான உறவு மிகத் தொன்மையானது. சங்க இலக்கியங்கள், தொல்காப்பியம், சிலப்பதிகாரம், பரிபாடல், தேவாரம், திருவாசகம், நாலாயிரத் திவ்யப் பிரபந்தம், திருப்புகழ் போன்ற இலக்கியங்களில் இசையும் மொழியும் ஒன்றிணைந்த நிலையில் காணப்படுகின்றன. குறிப்பாக பாடல்களின் பொருள், உச்சரிப்பு, யாப்பு, பண், தாளம், இசையமைப்பு ஆகிய அனைத்தும் மொழியியல் அடிப்படைகளோடு தொடர்புடையவை. இவ் ஆய்வானது இசை, மொழி, கற்பித்தல் ஆகிய தளங்களூடாக ஆய்வை முன்னெடுக்கின்றது. சீரிய முறையில் ஒரு இசையானது வெளிப்பட வேண்டுமெனின் அங்கு மொழியின் பங்கு முக்கியமானது. இசைபோதிப்பதில் மொழியின் தாக்கம் இன்றியமையாததாகவிருந்தது. இன்றைய இசைக் கல்வியிலும் மொழியறிவு என்பது இன்றியமையாததாகும். இசை கற்பித்தலில் சுரம், இராகம், தாளம் ஆகியவை மட்டுமன்றி, பாடல்வரிகளின் சரியான உச்சரிப்பு, பொருள் உணர்தல், சொற்களின் ஒலியமைப்பு, உணர்ச்சி வெளிப்பாடு ஆகியவற்றிலும் மாணவர்களுக்கு தெளிவு வழங்கப்பட வேண்டும். குறிப்பாக தமிழிசைக் கற்பித்தலில் மொழியியல் அறிவு இல்லாதபோது பாடல்களின் பொருள் சிதைவடைவதோடு மட்டுமல்லாமல், இசையின் உணர்வும் குறைக்கிறது. மொழி பிறழ்ந்த இசையானது களையிழந்து போகும். மொழியை இசையோடு முதன்மைப்படுத்தி மொழியியலில் தேவையான சில பகுதிகளையும், இசை கற்பித்தலில் மொழியின் ஆழமான தேவையையும் இசையாசிரியருக்கு இருக்கவேண்டிய மொழியறிவு பற்றியும் மாணவர்களுக்கு தேவையான மொழியறிவு பற்றியும் கற்றல் கற்பித்தலில் மொழியியலின் முக்கியத்துவத்தையும் குறைபாடுகள், தேவைகள், தீர்வுகள் ஆகியவற்றையும் வழங்கியதோடு, இந்த ஆய்வானது இத்தளத்தில் எதிர்கால ஆய்வுகளுக்கான பரிந்துரைகளையும் வழங்கியுள்ளது. இசை கற்பித்தலில் பெரும்பாலும் இராகம், தாளம், சுருதி, குரல் வளம் போன்ற அம்சங்களுக்கே அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. ஆனால் பாடலின் மொழி, பொருள், உச்சரிப்பு, ஒலியியல், இலக்கண அமைப்பு போன்ற மொழியியல் கூறுகள் போதிய கவனத்தைப் பெறுவதில்லை. எனவே இசைக் கற்பித்தலில் மொழியியல் எந்த அளவிற்கு அவசியமானது என்பதை ஆராய்வதே இவ் ஆய்வின் மையச் சிக்கலாக அமைகிறது இவ் ஆய்வின் முதன்மை நோக்கமானது இசைக் கற்பித்தலில் மொழியியலின் அவசியத்தை ஆராய்வதாகும் துணை நோக்கங்களாக மொழிக்கும் இசைக்கும் இடையிலான உறவை விளக்குதல். உச்சரிப்பின் முக்கியத்துவத்தை ஆராய்தல், பாடல்வரிப் பொருள் இசை வெளிப்பாட்டில் ஏற்படுத்தும் தாக்கத்தை ஆய்வு செய்தல், தமிழிசைக் கற்பித்தலில் மொழியியல் அடிப்படையிலான கற்பித்தல் முறைகளை ஆராய்தல், மொழியியல் அறிவு மாணவர்களின் இசைக் கற்றலை எவ்வாறு மேம்படுத்துகிறது என்பதை விளக்குதல் ஆகியனவாகும். ஆய்வானது சுட்டும் முக்கியத்துவங்களாக இசை ஆசிரியர்களுக்கு மொழியியல் அடிப்படையிலான கற்பித்தல் முறைகளை அறிமுகப்படுத்தும்., மாணவர்களின் உச்சரிப்புத் திறனை மேம்படுத்தும், தமிழிசைப் பாடல்களின் பொருளை சரியாகப் புரிந்துகொள்ள உதவும், இசையின் அழகியல் தரத்தை உயர்த்தும், தமிழிசைக் கல்விக்கான புதிய கற்பித்தல் அணுகுமுறைகளை முன்வைக்கும். இவ் ஆய்வில் தரவுப் பகுப்பாய்வு, உள்ளடக்கப் பகுப்பாய்வு (Content Analysis) ஒப்பீட்டு ஆய்வு, விளக்கவியல் அணுகுமுறை, பண்பியல் (Qualitative) மற்றும் விளக்கவியல் ((Descriptive) போன்ற ஆய்வு முறைகள் பயன்படுத்தப்படுத்தப்பட்டுள்ளன. en_US
dc.language.iso en en_US
dc.publisher Sir Ponnambalam Ramanathan Faculty of Visual and Performing Arts University of Jaffna en_US
dc.subject இசை en_US
dc.subject மொழியியல் en_US
dc.subject கற்பித்தல் en_US
dc.subject தமிழிசை en_US
dc.subject இசையாசிரியர் en_US
dc.title இசை கற்பித்தலில் மொழியியலின் அவசியம் en_US
dc.type Conference paper en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record