DSpace Repository

சமகாலச் செல்நெறியில் சைவசமூகத்தின் இயங்கியல்: வலிகாமம் தெற்குப் பிரதேசத்தை முன்னிறுத்திய ஆய்வு

Show simple item record

dc.contributor.author Thilaxshana, T.
dc.contributor.author Selvamanoharan, T.
dc.date.accessioned 2026-03-13T05:19:48Z
dc.date.available 2026-03-13T05:19:48Z
dc.date.issued 2025
dc.identifier.uri http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12379
dc.description.abstract ஈழத்து சூழலில் குறிப்பாக யாழ்ப்பாணத்தின் கலாசாரத்தை கட்டமைப்பதில் சைவ சமயமானது பெரும் பங்கு வகித்து வருகின்றது. அந்த வகையில் யாழ்ப்பாணம் வலிகாமம் தெற்கு பிரதேசத்தை ஆய்வுத் தளமாகக் கொண்டு சைவ சமூகத்தின் சமகால இயங்கியலை ஆராய்வதாக இந்த ஆய்வு அமைகின்றது. ஆய்வில் வலிகாமம் தெற்குப் பிரதேசத்தில் உள்ள இடங்கள் ஆய்வு எல்லையாக பயன்படுத்தப்படுகின்றது. யாழ்ப்பாண சமூகமானது நீண்ட பாரம்பரியமுடையதாக மிளிர்கின்றது சமகாலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப வளர்ச்சி, யுத்தத்தின் பின்னரான மனோநிலை, மதமாற்றம் போன்ற பல காரணிகள் இச்சமூகத்தில் பல்வேறு தாக்கங்களை உருவாக்கிக் கொண்டு வருகின்றன. அந்த அடிப்படையில் சைவ சமூகத்தில் தற்கால இயங்கியலில் ஏற்பட்டிருக்கின்ற சவால்கள், மாற்றங்கள,; பாதிப்புகள் எத்தகைய தன்மை உடையனவாக இருக்கின்றன என்பதனை மையமாகக் கொண்டதாக இந்த ஆய்வுப்பிரச்சினை அமைகின்றது. ஆய்வு நோக்கமானது சமகாலத்தில் வலிகாமம் தெற்கு பிரதேசத்தில் சைவ சமூகத்தின் இயங்கியல் எத்தகைய தன்மை வகிக்கின்றது என்பதாகும். இந்த ஆய்வானது விபரண ஆய்வு, வரலாற்று முறை ஆய்வு என்பனவும் கள ஆய்வும் பயன்படுத்தப்பட்டுள்ளன. சமகாலச் சூழலில் சைவ சமூகம் பல்வேறு மாற்றங்களை எதிர்கொண்டு வருகின்றது நவீன காலத்திற்கு ஏற்ப சைவ சமூகம் தனது பாரம்பரியத்தை பாதுகாத்து புதிய சூழ்நிலைகளுக்கு ஏற்ப ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. எனவே இச்சமுதாயம் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அதன் எதிர்கால முன்னேற்றத்திற்கான பரிந்துரைகளும் முன்வைக்கப்படுகின்றன. அவ்வகையில் சமய அடையாளத்தை காக்கும் நடவடிக்கைகளில் பிரதேசத்தினர் ஈடுபட வேண்டும். இப்பிரதேசத்தின் கோவில்கள் கலாசாரங்கள் என்பவற்றை பாதுகாக்க ஆய்வுகளை மேற்கொண்டு அதனை ஆவணம் ஆக்குதல் வேண்டும். மேலும் சைவ சமுதாயத்தின் பொருளாதார நிலை மேம்பட ஆலயங்களின் வருவாயில் ஒரு பகுதியினை சமுதாய நலத்திட்டங்களில் பயன்படுத்தலாம். இந்த ஆய்வினை மேற்கொள்வதன் ஊடாக வலிகாமம் தெற்குப் பிரதேசத்தில் உள்ள சைவ சமூக மக்களின் மத மரபுகள், சமூகம் சார்ந்த செயற்பாடுகள் மற்றும் பண்பாட்டு சிந்தனைகள் என்பவற்றினை அறிய விரும்பும் ஆய்வாளர்களுக்கு உதவியாக காணப்படுவதுடன் அப்பிரதேசத்தின் சைவ சமூகத்தின் தற்கால போக்கினைப் பற்றியும் அறிய உதவியாக அமையும். en_US
dc.language.iso other en_US
dc.publisher Faculty of Arts University of Jaffna, Sri Lanka en_US
dc.subject கோயில்கள் en_US
dc.subject யாழ்ப்பாணம் en_US
dc.subject வலிகாமம் en_US
dc.subject சைவசமூகம் en_US
dc.title சமகாலச் செல்நெறியில் சைவசமூகத்தின் இயங்கியல்: வலிகாமம் தெற்குப் பிரதேசத்தை முன்னிறுத்திய ஆய்வு en_US
dc.type Conference paper en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record