DSpace Repository

போருக்குப் பின்னரான யாழ்ப்பாணப் புகைப்படவியலில் பேசுபொருட்களும், பேசாப்பொருட்களும்

Show simple item record

dc.contributor.author Thamiliny, S.
dc.contributor.author Raguram, S.
dc.date.accessioned 2026-03-12T03:51:07Z
dc.date.available 2026-03-12T03:51:07Z
dc.date.issued 2025
dc.identifier.uri http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12355
dc.description.abstract வேகமாக உருண்டோடும் காலத்தினை நிறுத்தி வைக்கக்கூடிய சக்தியைத் தன்னுள் கொண்ட கலையே புகைப்படவியல். அத்துடன், காலத்தின் விம்பங்களைப் பறைசாற்றுபவையாக அது அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. புகைப்படவியலினைப் பொறுத்தவரையில் பல்வேறு காரணங்களுக்காகப் புகைப்படங்கள் பதிவுசெய்யப்படுகின்றன. நிகழ்வுகளை ஆவணப்படுத்தல், செய்திகள், விளம்பரங்கள் போன்றவற்றுக்கு அதிகளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரையில், அமெரிக்க மிஷனரிக் காலத்தில் இருந்து ஆரம்பமாகி இன்றுவரை பல்வேறு உள்ளடக்கங்களை உள்வாங்கியும் வெளித்தள்ளியும் யாழ்ப்பாணத்துக்கான புகைப்படவியல் வளர்ச்சிபெற்றும் மாற்றங்களைச் சந்தித்தும்; வருகின்றது. உருவப்படப் புகைப்படவியல் (Portrait Photography) தெரு அல்லது பயணம்சார்ந்த புகைப்படவியல் (Street Photography) இயற்கை புகைப்படவியல் (Nature Photography)இ போர்காலப் புகைப்படவியல் (War Photography) ஆவணப் புகைப்படவியல் (Documentary Photography) என வளர்ச்சிபெற்று, தற்பொழுது நடப்பு வழக்குப் புகைப்படவியல் (Fashion Photography - Wedding and Model Shoot) என அந்த மாற்றம் நீண்டுகொண்டே செல்கின்றது. அந்தவகையில், யாழ்ப்பாணப் புகைப்படவியல் எவ்வாறான புகைப்படங்களை அதிகம் பேசு பொருளாகக் கொண்டுள்ளது, எவ்வாறான புகைப்படங்களைப் பேசாப்பொருளாகக் கொண்டுள்ளது, அவ்விடயங்கள் பேசப்படாமல் இருப்பதற்கான காரணங்கள் யாவை என்பதனையும், தனிநபர் பிரபல்யமும் வணிகநோக்கமும் கொண்டுள்ள தாக்கங்களையும்; கண்டறிவதனை நோக்கமாகக் கொண்டு இந்த ஆய்வு முன்னெடுக்கப்பட்டது. புகைப்படங்களில் குறியீடுகள், வர்ணப் பாவனை, புகைப்படவியலில் காணப்படும் சவால்கள், அவற்றின் பிரதிபலிப்புகள் எவ்வாறுள்ளன போன்ற துணை வினாக்களையும் இந்த ஆய்வு மையங்கொண்டுள்ளது. இதற்காக, ஆய்வாளர் பனிப்பந்து மாதிரி மற்றும் இயல்தகமை மாதிரி ஆகியவற்றைக் கையாண்டு யாழ்ப்பாண மாவட்டத்தில் பணியாற்றும் 07 புகைப்படவியலாளர்கள் மற்றும் 07 புகைப்பட ஊடகவியலாளர்களை அடிப்படையாகக் கொண்டு எண்சார் மற்றும் பெறுதிசார்ந்த பகுப்பாய்வாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக அவதானிப்பு மற்றும் நேர்காணல் போன்ற முறைகள் மூலம் ஆய்வுக்கான தரவுகளை ஆய்வாளர் திரட்டியுள்ளார். மேற்படி ஆய்வின் வழியாக, யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிகளவில் சமூகப் பிரச்சினைகள், போர்க்கால வடுக்கள், ஆலயங்களின் விழாக்கள், திருமண மணப்பெண் அலங்காரம், மாதிரிப் புகைப்படவியல் (Model Shoot மற்றும் Baby Shoot) வனவாழ்வியல் அல்லது வன உயிரியல் புகைப்படவியல்(Wildlife Photography)) போன்றன அதிகளவு பேசுபொருட்களாகவும், யாழ்ப்பாணத்தின் சமூக ஒதுக்கல் மற்றும் விலக்கற் சம்பவங்கள், சட்டத்திற்கு முரணான விடயங்கள் பேசாப்பொருட்களாகுவதும் அவதானிக்கப்பட்டது. குறிப்பிடத்தக்க அளவிலான புகைப்படவியலாளர்கள் தனிநபர் பிரபல்யத்தை நோக்கமாகக் கொண்டு செயற்பட்டு வருவதுடன், வணிக நோக்கம் காரணமாக தனிநபர் வளர்ச்சி மற்றும் வருமானம் ஈட்டுதல் போன்றவற்றால் முக்கிய புகைப்படவியல் விதிமுறைகள், அறநெறிகள் மீறப்படுவதையும் ஆய்வின் ஊடாக இனங்காணமுடிந்தது. en_US
dc.language.iso other en_US
dc.publisher Faculty of Arts University of Jaffna, Sri Lanka en_US
dc.subject யாழ்ப்பாணம் en_US
dc.subject புகைப்படவியல் en_US
dc.subject புகைப்படவியலாளர் en_US
dc.subject புகைப்பட ஊடகவியலாளர் en_US
dc.subject பேசுபொருள் en_US
dc.subject பேசாப்பொருள் en_US
dc.title போருக்குப் பின்னரான யாழ்ப்பாணப் புகைப்படவியலில் பேசுபொருட்களும், பேசாப்பொருட்களும் en_US
dc.type Conference paper en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record