DSpace Repository

வ. அ. இராசரத்தினத்தின் நாவல்கள்: ஓர் ஆய்வு

Show simple item record

dc.contributor.author Fathima Nifrin, A.
dc.contributor.author Seransan, S.
dc.date.accessioned 2026-03-04T04:22:43Z
dc.date.available 2026-03-04T04:22:43Z
dc.date.issued 2025
dc.identifier.uri http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12301
dc.description.abstract கிழக்கிலங்கை இலக்கியப் படைப்பாளிகளுள் ஒருவராக அறியப்படுபவரே வ. அ. இராசரத்தினம். இவர் இலக்கிய உலகில் தடம் பதித்ததிலிருந்து அதிகளவிலான சிறுகதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புக் கவிதைகள் என்பவற்றுடன் வாசகரிடத்திலே வரவேற்பைப் பெற்ற சில நாவல்களையும் எழுதியுள்ளார். இவரது நாவல்கள் சஞ்சிகைகளிலும் மாதாந்த இதழ்களிலும் தொடர்கதைகளாக இடம்பெற்றுள்ளன. இவர் தனது நாவல்களினூடாக கிழக்கிலங்கை மக்களின் வாழ்வியலை அடிநாதமாகக் கொண்டு அவர்களது பழக்கவழக்கங்கள், பண்பாடுகள் என்பவற்றையே எடுத்துரைக்கின்றார். இத்தகைய பண்புகளைக் கொண்ட நாவல்களாகக் கொழுகொம்பு, ஒரு வெண்மணற் கிராமம் காத்துக்கொண்டிருக்கின்றது, கிரௌஞ்சப் பறவைகள், மண்ணிற் சமைந்த மனிதர்கள் என்பன விளங்குகின்றன. வ. அ. இராசரத்தினம் தான் வாழ்ந்த காலகட்டத்தில் நிகழ்ந்த சம்பவங்களையே நாவல்களாக்கித் தந்துள்ளார். ஈழத்தில் பல்வேறு காலகட்டங்களிலும் எழுந்த நாவல்கள் அக்காலகட்ட அரசியல் வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டுவனவாகவோ அல்லது இன, மத முரண்பாட்டு மோதல்களை மேலோட்டமாக அல்லது சுருக்கமாகக் கூறுவனவாக அமைந்திருக்க வ. அ. இராசரத்தினத்தின் நாவல்கள் அவரது காலப்பகுதிக் கிழக்கிலங்கையின் பண்பாடுசார் விடயங்களை எடுத்துக்காட்டுவனவாகவே அமைந்துள்ளன. அந்தவகையில் இந்த ஆய்வானது வ. அ. இராசரத்தினத்தின் நாவல்களின் உள்ளடக்கம், பாத்திரவார்ப்பு, மொழிநடைப் பிரயோகம் என்பவற்றை ஆராய்வதன் ஊடாக கிழக்கிலங்கை மக்களின் வாழ்வியலை எவ்வாறு பேசுகின்றது என்பதை எடுத்துரைப்பதை நோக்காகக் கொண்டமைந்துள்ளது. இந்த ஆய்வானது பகுப்பாய்வு முறையில் இடம்பெற்றுள்ளதுடன் விபரண ஆய்வு முறையைப் பின்பற்றி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ் ஆய்விற்கான முதன்நிலை ஆதாரங்களாக வ. அ. இராசரத்தினத்தின் கொழுகொம்பு, ஒருவெண்மணற் கிராமம் காத்துக் கொண்டிருக்கிறது, கிரௌஞ்சப் பறவைகள், மண்ணிற் சமைந்த மனிதர்கள் ஆகிய நாவல்களும் துணைநிலை ஆதாரங்களாக கட்டுரைகள், இணையத்தளங்களிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களும் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. இவ் ஆய்வினுடைய பயனாக வ. அ. இராசரத்தினது நாவல்களை ஆராய்வதனூடாக கிழக்கிலங்கை மக்களின் வாழ்க்கைமுறை, பழக்கவழக்கங்கள், பண்பாடுகள் என்பவற்றை அறிந்துகொள்வதுடன் அவரது நாவல்களில் இடம்பெற்றுள்ள பாத்திரவார்ப்பு, மொழிநடைப் பிரயோகம் என்பவற்றையும் அறிவதற்கு வாய்ப்பாக அமைகிறது. en_US
dc.language.iso other en_US
dc.publisher Faculty of Arts University of Jaffna, Sri Lanka en_US
dc.subject கிழக்கிலங்கை en_US
dc.subject சாதாரண மக்கள் en_US
dc.subject வாழ்வியல் en_US
dc.subject பண்பாடு en_US
dc.subject பேச்சுமொழி en_US
dc.title வ. அ. இராசரத்தினத்தின் நாவல்கள்: ஓர் ஆய்வு en_US
dc.type Conference paper en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record