DSpace Repository

வீட்டு வன்முறைக்கு ஆளாகும் கட்டிளமைப் பருவப் பிள்ளைகளின் உளப்பாதிப்புகள்

Show simple item record

dc.contributor.author Libika, T.
dc.contributor.author Rajkumar, A.
dc.date.accessioned 2026-02-27T05:43:28Z
dc.date.available 2026-02-27T05:43:28Z
dc.date.issued 2025
dc.identifier.uri http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12275
dc.description.abstract இன்றைய காலத்தில் பல்வேறுபட்ட வன்முறை வடிவங்களாகக் காணப்படுகின்ற போதிலும் வீட்டு வன்முறை முக்கியமானதாகக் காணப்படுகின்றது. வீட்டு வன்முறை வீட்டில் உள்ள பல்வேறு மட்டங்களில் இடம்பெறுகின்ற போதிலும், கட்டிளமைப் பருவத்தில் ஏற்படுகின்ற வன்முறை அவர்களிடத்தில் பல்வேறுபட்ட உளப்பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. அதாவது உடல், உள, உணர்வு. சமூக ரீதியாகப் பாதிப்பதோடு மனச்சோர்வு, மன அழுத்தம். பதகளிப்பு போன்ற பல்வேறு வகையான உளப் பாதிப்புகளை எதிர்கொள்கின்றவர்கள் ஆகுகின்றனர். இவ்வாய்விலே 63 மாதிரிகள் நோக்கம் கருதிய மாதிரி எடுப்பில் தெரிவு செய்யப்பட்டு ஆய்வுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளனர். இவ்வாய்வானது கட்டிளமைப்பருவத்தினரிடத்தில் வீட்டு வன்முறையால் ஏற்படும் உளப்பாதிப்புகளை இனங்காணுவதனை நோக்கமாகக் கொண்டுள்ளது. இவ் ஆய்வின்போது பண்புசார் தரவுகள் கருப்பொருள் ரீதியான பகுப்பாய்வு முறைக்கும். அளவுசார் தரவுகள் விபரணப் புள்ளிவிபரவியல் ரீதியான முறையில் மென்பொதி (SPSS-21) முறையைப் பயன்படுத்தித் தரவுப் பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. T.Test, Regression, Correlation, Mean, Chi-Square Test போன்ற முறைகளைப் பயன்படுத்தித் தரவுப் பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாய்வினுடைய முடிவுகளாக, வீட்டு வன்முறைக்கு உள்ளாகும் கட்டிளமைப் பருவப் பிள்ளைகள் உளப் பாதிப்புகளான (M=17>4123> P = 0.000) 0.000) மனச்சோர்வு, (M-15.861. P-0.000) மன அழுத்தம், (M=24.3861>P=0.000) பதகளிப்பு என்பவற்றை எதிர்கொள்வது கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல்( (M-12.3361> P = 0.000) உடல் ரீதியான வன்முறைகளை எதிர்கொள்ளும் கட்டிளமைப் பருவ மாணவர்களின் மன அழுத்தம் மற்றும் பதகளிப்பிற்கும் இடையேயும், (P = 0.001 >r=0.786) குடும்ப வருமானத்திற்கும் மாணவர்களின் பதகளிப்பிற்கு இடையேயும் தொடர்பு உள்ளமை அறியமுடிகின்றது. மேலும், (P = 0.019. X² = 35.173) சிறுபராயத்தில் எதிர்கொண்ட வன்முறைகள் கட்டிளமைப் பருவத்தினரின் மனச்சோர்வில் தாக்கம் செலுத்துகின்றமை போன்ற (P = 0.019) முடிவுகள் பகுப்பாய்வு மூலம் இங்கே பெறப்பட்டுள்ளன. இவ்வாய்வினுடைய பரிந்துரை எனும் போது, வீட்டு வன்முறை தொடர்பாகக் கட்டிளமைப் பருவத்தினர் இடையே சரியான விழிப்புணர்வுகளை உருவாக்குவதுடன், அது தொடர்பான சரியான தெளிவூட்டலையும் அதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கான வழிமுறைகளையும் வழங்குவதுடன், பெற்றோரிடமும் இது தொடர்பான தெளிவூட்டலை வழங்குவதும் அவசியமானதாகக் காணப்படுகின்றது. en_US
dc.language.iso other en_US
dc.publisher Faculty of Arts University of Jaffna, Sri Lanka en_US
dc.subject வன்முறை en_US
dc.subject உளப்பாதிப்பு en_US
dc.subject கட்டிளமைப் பருவத்தினர் en_US
dc.subject மனச்சோர்வு en_US
dc.subject பதகளிப்பு en_US
dc.title வீட்டு வன்முறைக்கு ஆளாகும் கட்டிளமைப் பருவப் பிள்ளைகளின் உளப்பாதிப்புகள் en_US
dc.type Conference paper en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record