DSpace Repository

நகைத் தொழிலாளர்களின் தொழில்சார் அசைவியக்கத்தில் சமூக மூலதனத்தின் வகிபங்கு: நாச்சிமார் கோவிலடிப் பிரதேசத்தினை அடிப்படையாகக்கொண்ட ஒரு சமூகவியல் ஆய்வு

Show simple item record

dc.contributor.author Liveka, P.
dc.contributor.author Srikanthan, S.
dc.date.accessioned 2026-02-26T09:22:50Z
dc.date.available 2026-02-26T09:22:50Z
dc.date.issued 2025
dc.identifier.uri http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12263
dc.description.abstract இவ் ஆய்வானது, விஸ்வ குலப்பிரிவுகளில் ஒன்றான நகைத் தொழிலில் ஈடுபடுவோரின் தொழில்சார் அசைவியக்கத்தில் சமூக மூலதனக் காரணங்களின் வகிபங்கினை ஆராய்வதனை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது யாழ்ப்பாண மாவட்டத்தின், நல்லூர் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட வண்ணார் பண்ணை - நாச்சிமார் கோவிலடி (துஃ100) பிரதேசத்தை அடிப்படையாகக்கொண்ட பண்புசார் ஆய்வு ஆகும். ஆய்விற்காக முதலாம் நிலைத்தரவாக விடய ஆய்வும் இரண்டாம் நிலை தரவுகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. பெறப்பட்ட தரவுகள் கருப்பொருள் அடிப்படையில் சமூக மூலதன கோட்பாடு மற்றும் தொழில்சார் அசைவியக்கக் கோட்பாடுகளின் துணையுடன் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. ஆய்வில் முக்கிய முடிவாக, நகைத்தொழிலில் ஈடுபடுவோரின் (தட்டார் குலம்) தொழில்சார் அசைவியக்கத்தில் மூன்று வகையான சமூக மூலதனக் காரணிகளின் வகிபங்கு இனங்காணப்பட்டுள்ளன. குறிப்பாக, சமூக மூலதனத்தின், ஆரம்பித்தல்சார் மூலதனத்தினால் பாதிக்கப்பட்டவர்களாக முதலாம் மற்றும் இரண்டாந் தலைமுறையினர் காணப்படுகின்றனர். குறிப்பாக, தொழில்நுட்பம், பொருளாதார மற்றும் சமூக வலையமைப்புக் காரணிகளே அதிக செல்வாக்கைச் செலுத்துகின்றன. பிணைத்தல்சார் மூலதனக் காரணங்களால் அதிக செல்வாக்கு உட்பட்டவர்களாக இரண்டாந் தலைமுறையினர் காணப்படுகின்றனர். இவர்களின் சமூக அசைவியக்கத்தில், போர்க்கால அனுபவங்கள், நகைக் கடைகளில் மாற்றுச் சாதியினர் தொழில் பழகுதல், புதிய தொழில்களின் இணைவு, வேலையின்மை மற்றும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளின் செலுத்துகின்றன. இணைத்தல்சார் மூலதன காரணங்களால் இரண்டாந் தலைமுறையினர் அதிகம் பாதிக்கப்படுவதுடன், இவர்களின் அசைவியக்கத்தில் புலப்பெயர்வு மற்றும் வர்த்தகத் தொடர்புகள் சார்ந்த காரணங்களால் அதிகம் தாக்கம் செலுத்துகின்றன. இந்நிலையில் குலத்தொழிலைத் தொடர்ந்து மேற்கொள்வோரின் தொழில்சார் அசைவியக்கத்தின் சாதக நிலைகளில் நிலைபேறான தன்மையைப் பேணுவதற்கு சமூக மூலதனத்தினைப் பலப்படுத்துவதற்கான பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. en_US
dc.language.iso other en_US
dc.publisher Faculty of Arts University of Jaffna, Sri Lanka en_US
dc.subject சாதி அமைப்பு en_US
dc.subject சமூக மூலதனம் en_US
dc.subject சமூக அசைவியக்கம் en_US
dc.subject தொழில்சார் அசைவு en_US
dc.title நகைத் தொழிலாளர்களின் தொழில்சார் அசைவியக்கத்தில் சமூக மூலதனத்தின் வகிபங்கு: நாச்சிமார் கோவிலடிப் பிரதேசத்தினை அடிப்படையாகக்கொண்ட ஒரு சமூகவியல் ஆய்வு en_US
dc.type Conference paper en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record