| dc.description.abstract |
தேயிலை இலங்கையின் முக்கிய ஏற்றுமதி மற்றும் அந்நியச் செலாவாணியை ஈட்டும் பயிர்களில் ஒன்றாகும். இத்தகைய தேயிலை உற்பத்திக்கு ஆண்டு முழுவதும் சீரான தொழிலாளர் வளங்கள் தேவைப்படும் நிலையில், தற்போது தேயிலை பெருந்தோட்டத்துறை தொழிலாளர் பற்றாக்குறையினால் பல சவால்களுக்கு முகங்கொடுக்கின்றது. இந்நிலையில் குறித்த ஆய்வு, வருடாந்த தொழிலாளர் குறைப்பு வீதங்களை கணக்கிடுவதுடன்; தொழிலாளர் பற்றாக்குறைக்கான காரணங்களை பகுப்பாய்வு செய்து உற்பத்தி, தரம் மற்றும் ஒட்டுமொத்த தேயிலை உற்பத்தியில் தொழிலாளர் பற்றாக்குறையின் தாக்கத்தை மதிப்பிடுதலை பிரதான நோக்கமாக கொண்டுள்ளது. நோக்கத்தை அடிப்படையாகக் கொண்ட மாதிரியினூடாக கட்டமைக்கப்பட்ட வினாக்கொத்து மற்றும் தோட்ட நிர்வாக அதிகாரிகளிடமிருந்து கட்டமைக்கப்பட்ட நேர்காணல்களின் மூலம் முதலாம் நிலைத்தரவுகள் சேகரிக்கப்பட்டதுடன், தோட்ட நிர்வாகத்திடமிருந்து இரண்டாம் நிலைத் தரவுகள் சேகரிக்கப்பட்டு, Microsoft Excel (Version 2023), SPSS ஆகிய மென்பொருளைப் பயன்படுத்தி விபரணபுள்ளிவிபரவியல் பகுப்பாய்வினூடாக முடிவுகள் பெறப்பட்டுள்ளன. ஆய்வின் முடிவுகளாக, வருடாந்த தொழிலாளர் குறைப்பு வீதமானது சென்கூம்ஸ் தோட்டத்தை விடவும் வோல்ட்றிம் தோட்டத்தில் 13% ஆல் அதிகளவில் காணப்படுகின்றது. சென்கூம்ஸ் தோட்டத்தில் தொழிலாளர் குறைப்பு வீதத்தில் குறிப்பிடத்தக்க ஏற்ற இறக்கங்கள் காணப்படுவதோடு தொழிலாளர் வளர்ச்சி 2023, 2024 ஆம் ஆண்டுகளில் முறையே -1%, -5 % இல் மிதமான போக்கை காட்டுகிறது. குடித்தொகைக் காரணி, பொருளாதாரக் காரணி, சமூகக கலாச்சார காரணி, பணிநிலைமைகள் மற்றும் இடப்பெயர்வுக் காரணிகள் என்பன தொழிலாளர் பற்றாக்குறைக்கு பங்களிக்கும் காரணிகளாக அமைகின்றன. தொழிலாளர் பற்றாக்குறையினால் தேயிலை உற்பத்தியானது, சென்கூம்ஸ் தோட்டத்தில் 39% இலும், வோல்ட்றிம் தோட்டத்தில் 27% இலும் குறைவடைந்துள்ளது. தேயிலை விளைச்சலானது, சென்கூம்ஸ் தோட்டத்தில் 22% ஆலும் வோல்ட்றிம் தோட்டத்தில் 27% ஆலும் குறைவடைந்து சென்றுள்ளது. இரண்டு தோட்டங்களிலும் நிகர விற்பனை மாத்திரம் உயர்வடைந்து செல்லும் போக்கை ஆய்வு வெளிப்படுத்துகிறது. இவ்வாறு தொழிலாளர் பற்றாக்குறை அதிகரித்து செல்லுமாயின் இலங்கையின் ஏற்றுமதி பாதிப்படைந்து அந்நிய செலாவாணியை கேள்விக்குரியதாக்கும் நிலை ஏற்படும். இதனை தவிர்ப்பதற்கு நவீனதொழில்நுட்ப சாதனங்களின் பயன்பாடு மற்றும் தொழிலாளர் நலன்களில் கவனம் செலுத்துதல் என்பன அவசியமானதாக காணப்படுகின்றது |
en_US |