| dc.description.abstract |
மனிதனது வாழ்வில் இடம் பெறும் சமூக நிறுவனங்களில் சமயமும் ஒன்றாகும். மனிதனை மனிதனாக வாழ அவனை நல்வழிப்படுத்துவதே சமயங்களில் பிரதான பணியாகும். சமயம் என்பது புனிதமான ஒன்றைப் பற்றிய நம்பிக்கைகளும் செயல்முறைகளும் அடங்கிய ஓர் ஒழுங்கமைந்த முறை எனலாம். அந்தவகையில் இந்துசமய வாழ்வின் முக்கிய கூறாக விளங்குகின்ற ஆலயங்கள் இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போருக்கு பின்னரான காலத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்கும் சவால்களுக்கும் முகங்கொடுத்து வருகின்றன. குறித்த ஆய்வில் வட்டகச்சிப் பிரதேசத்தின் மாயவனூர் கிராமத்தையும் அங்குள்ள திருக்குழல் நன்மாதுமைசமேத கணபதீஸ்வரர் சிவாலயத்தையும் ஆய்வு எல்லையாகக் கொண்டு ஆய்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது. அத்தோடு ஆரம்ப காலத்தில் இருந்த இந்துப் பண்பாட்டு முறையானது தற்காலத்தில் வழக்கொழிந்து போகின்றது. பிற சமயங்களில் மதமாற்றம், இளைய சமுதாயத்தினரின் விழிப்புணர்வற்ற செயற்பாடு, மேல்நாட்டு பண்பாட்டு மோகம் என்பவற்றால் எமது பாரம்பரிய வழிபாட்டு மரபானது இல்லாமல் போகின்றமை இங்கு ஆய்வுப் பிரச்சினையாக எடுத்துக்கொள்ளப்படுகின்றது. ஆய்வின் நோக்கமாக அருகி வருகின்ற கலை, கலாச்சாரம், பண்பாட்டு அம்சங்கள் மற்றும் ஆலயம் தொடர்பான காணாமல் ஆக்கப்பட்ட பாரம்பரிய விடயங்களைக் கண்டறிதலை குறிப்பிடலாம். இவ்வாய்வானது விபரண ஆய்வு, பகுப்பாய்வு, வரலாற்று ஆய்வு களாய்வு முறைகளைப் பயன்படுத்தி வினாக்கொத்து, நேர்காணல் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றது. ஆரம்ப காலத்தில் இருந்த இந்துப் பண்பாட்டு முறையானது தற்காலத்தில் வழக்கொழிந்து போகின்றமையினை தடுக்கும் பரிந்துரைகளாக இந்து ஆலயங்களில் அவற்றோடு தொடர்புடையவர்களின் கடமைகள், உரிமைகள் தொடர்பாக இந்துச் சட்டம் அமைக்கப்பட வேண்டும். இந்து சமய நம்பிக்கைகளை மேம்படுத்தும் வகையிலும் சிறந்த ஒழுக்கம் தலைமைத்துவப் பண்பாடு போன்றவற்றை வலுப்படுத்தும் நோக்கில் விழிப்புணர்வு கருத்தரங்குகள் ஆன்மீகச் சொற்பொழிவுகள் மற்றும் சமய பயிற்சிப்பட்டறைகள் போன்றவற்றை நடத்துதல், இந்து சமய நிறுவனங்கள் மற்றும் இந்து சமய கல்விமான்கள் ஆசிரியர்களின் முறையான வழிகாட்டுதல்களின் கீழ் ஆலயங்கள் இயங்குதல் வேண்டும். அந்தவகையில் கிளிநொச்சி மாவட்ட வட்டக்கச்சி பிரதேச சைவ பண்பாட்டு இயங்கியல் மற்றும் ஆலயம் தொடர்பாக அறிய விரும்புகின்ற ஆய்வாளர்களுக்கும் உதவும்வகையில் இந்த ஆய்வு அமைகின்றது. மேலும் இவ்வாய்வானது சைவ பண்பாட்டினை கட்டி எழுப்ப வேண்டும் என்பதையும் வலியுறுத்துவதாக அமைகின்றது. |
en_US |