| dc.description.abstract |
இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ்க் கவிதையுலகில் நன்கு அறியப்பட்டவர் முருகையன். ஈழத்துப் புலமைசார் மரபில், பாநாடகத்துறையில் குறிப்பிடத்தக்க சாதனைகளை நிலைநாட்டியுள்ளார். ஈழத்துப் பாநாடக மரபில் முருகையனின் வகிபாகத்தின் கண்டறிதலே இந்த ஆய்வின் நோக்கமாகும். விவரண மற்றும் ஒப்பீட்டு ஆய்வுமுறையினூடாகவும் இந்த ஆய்வு முன்னெடுக்கப்படுகிறது. அச்சில் வெளிவந்த வந்துசேர்ந்தன, தரிசனம் (1965), கோபுரவாசல் (1969), வெறியாட்டு (1986), மைற்பூச்சு (1995) சங்கடங்கள் (2000), அன்ரிகனி| (2007), உண்மை (2002), எனும் ஏழு பாநாடக நூல்களும் இந்த ஆய்வின் முதல் நிலைத்தரவுகாகவும் இதுவரை வெளிவந்த ஆய்வுநிலை எழுத்துகள் இரண்டாம் நிலைத் தரவுகளாகவும் அமைந்துள்ளன. முற்போக்குச் சிந்தனையுடைய இவர் பாநாடகத்துறை மட்டுமன்றி கவிதை, திறனாய்வு, மொழிபெயர்ப்பு, கலைச் சொல்லாக்கம் போன்ற பல்வேறுபட்ட துறைகளில் சாதனைகளை நிலைநாட்டியுள்ளனர். ஈழத்துப் பாநாடகத்துறையின் மூலம் இவர் தனது பாநாடகங்கினூடு சமூக மாற்றம், சமூக விடுதலை, பொதுவுடமைச் சித்தாந்தம், அரசியல் பிரச்சினைகள் போன்றவற்றை படம் பிடித்துக் காட்டியுள்ளனார். இந்த ஆய்வின் மூலம், ஈழத்துப் பாநாடகத்துறையின் முன்னோடியாகவும் இத்துறையில் பல்வேறுபட்ட புதிய உத்திமுறைகளைக் கையாண்டு புதுமைகள் நிகழ்த்தியவராகவும் ஏனைய படைப்பாளிகளுக்கு வழிகாட்டியாகவும் ஏனைய படைப்பாளிகளிருந்து தனித்துத் தெரியும் ஆளுமையாகவும் முருகையனை இனங்காண முடிந்தது |
en_US |