| dc.description.abstract |
ஐரோப்பிய அரங்க வரலாற்றின் கத்தோலிக்கத் திருச்சபையின் செல்வாக்கிற்கு உட்பட்ட காலப்பகுதியான மத்தியகாலத்தை மையப்படுத்தியதாக முன்னெடுக்கப்படுகிறது. மத்தியகால அரங்கில் கத்தோலிக்கத் திருச்சபையின் தேவாலய பூசை நடைமுறைகளும், அதன் ஊடாக மேற்கிளம்பிய சமயம் சார்ந்த நாடக வடிவங்களும், அவற்றின் நிகழ்த்துகை முறைமையும், நிகழ்த்துகை முறைமைக்கு அடிப்படையாக அமைந்த கருப்பொருளும் புதியதோர் கிறிஸ்தவ மனிதநேயப் பண்பாட்டை கட்டியெழுப்புவதற்கு எந்தளவு தூரம் பயன்பட்டன? என்பது இந்த ஆய்வில் ஆராயப்படுகின்றது. ஆரம்பகால அரங்க நடவடிக்கைகளின் மோசமான இழிநிலையின் சுவடுகள் உரோம அரங்கில் காணப்பட்டிருந்தன. இவ்வேளையில் கத்தோலிக்கத் திருச்சபை அரங்கில் காணப்பட்ட மனிதநேயமற்ற நடவடிக்கைகளை தடைசெய்வதற்கு எந்தளவில் உதவியது? என்பதே இங்கு ஆராயப்படுகின்றது. ஆரம்பகால கத்தோலிக்கத் திருச்சபையின் பூசைகள் இலத்தீன் மொழியில் நிகழ்த்தப்பட்டன. இந்த வகையில் தனது பூசை நடவடிக்கைகளில் அரங்கை இணைத்துக் கொண்டதன் மூலம் மக்களை அரங்க வாழ்வின் ஊடாக சமய வாழ்விற்கு இணைப்பதற்கான ஒரு பண்பாட்டிற்கான அழைப்பை எவ்வாறு மேற்கொள்ளுகின்றது? என்று இந்த ஆய்வு அனுகுகின்றது.
கத்தோலிக்கத் திருச்சபை நிறுவன ரீதியாக ஐரோப்பிய நாடுகளில் வளர்ச்சியடைந்த காலத்தில் மொழி, இன, நாடு ரீதியான வேறுபாடுகளைத் தவிர்த்து அனைவரும் கிறிஸ்தவர் எனும் புதிய சமூகக் கட்டமைப்பை உருவாக்கும் வகையில் கத்தோலிக்கத் திருச்சபை அரங்கை எவ்வாறு கையாண்டது? என்பது தொடர்பாகவும் இந்த ஆய்வில் நோக்கப்படுகின்றது. சமூகத்தின் ஒவ்வொரு துறைகளிலும் இயங்குபவர்கள் சமூகப் பொறுப்புணர்வு மிக்கவர்களாக இயங்குவது எதிர்பார்க்கப்படுகிறது. இந்தவகையில் கத்தோலிக்கத் தேவாலயங்களை விட்டு நாடகங்கள் வெளியேற்றப்பட்டாலும் திருச்சபை நாடகக் குழுக்களை சமூகப் பொறுப்புணர்வுடன் இயங்குவதற்கும் எவ்வளவு தூரம் கரிசனை கொண்டிருந்தது? என்றும் இங்கு ஆராயப்படுகின்றது. கிறிஸ்தவ நாடக இலக்கியம், கிறிஸ்தவ ஆற்றுகை மரபு எவ்வாறு தோன்றியது? என்பதும் திருச்சபை அந்த தோற்றத்தில் எந்தளவு பங்கு கொண்டிருந்தது? என்பதும் இவற்றின் மூலம் இறையியல் கருத்துக்கள் மக்களுக்கு எந்தளவு தூரம் பயன்பாடு உடையனவாக அமைந்தது? என்பதும் இங்கு நோக்கப்படுகிறது.
இறையியல் கருத்துக்களை முன்னெடுப்பதனை நோக்காகக் கொண்டிருந்த அரங்க நடவடிக்கைகள் மனிதநேயத்தையும், புதிய பண்பாட்டிற்கான அழைப்பையும், புதிய சமூகக் கட்டமைப்பையும், சமூகப் பொறுப்புணர்வையும், தமது நாடக வடிவங்களான மறைபொருள் நாடகம், ஒழுக்கப்பண்பு நாடகம், அற்புத நாடகங்கள் மூலம் எவ்வாறு வளர்த்தெடுத்தது? என்று இங்கு நோக்கப்படுகின்றது. ஐரோப்பிய அரங்க வரலாற்றில் கத்தோலிக்கத் திருச்சபை சமயம் சார்ந்து அரங்க நடவடிக்கையை முன்னெடுத்த போதிலும் ஏனைய காலப்பகுதியிலும் பார்க்க இக் காலப்பகுதியானது எந்தவகையில் முதன்மை பெறுகிறது? அரங்கிற்கான தேடலின் பண்பாட்டு பின்புலம் யாது?, இதன் மூலம் உருவாகிய பண்பாட்டின் அசைவு யாது? அந்தப் பண்பாடு மனித நேயத்துடன் முன்னெடுக்கப்பட்டதா? என்பதும் இந்த ஆய்வில் கண்டறியப்படுகிறது. இந்த ஆய்வு வரலாற்றுப் பண்பு கொண்ட விபரிப்பு ஆய்வாக அமைகிறது. ஆவணங்களைப் பரிசீலித்தல் என்ற முறையின் ஊடாகவும் இக் கட்டுரையானது அமைகின்றது. |
en_US |