DSpace Repository

தமிழர்களின் வாழ்வியல் செல்நெறியில் பெண்களுக்கான அங்கீகாரத்தை வழங்குவதில் சமயங்களின் வகிபங்கு: இந்து கிறித்தவ சமயங்களை அடிப்படையாக கொண்ட ஒரு நோக்கு

Show simple item record

dc.contributor.author Bhavanesan, V.
dc.date.accessioned 2026-01-16T02:59:12Z
dc.date.available 2026-01-16T02:59:12Z
dc.date.issued 2018
dc.identifier.uri http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12014
dc.description.abstract ஒருவனது வாழ்க்கையை செம்மைப்படுத்தும் சாதனங்கள் பலவாகும். அவற்றுள் சமயமும் ஒன்றாகும். சமயம் என்பதற்குப் பல வரைவிலக்கணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மனிதன் தனது வாழ்க்கையில் ஏற்படும் இன்ப துன்பங்களில் இருந்து விடுதலை அடைவதற்கு சாதகமாயுள்ள வாழ்க்கை வழி சமயம் எனவும் மனிதன் தன்கீழான சிந்தனைகளிலிருந்து விடுபட்டு நற்சிந்தனைகளில் ஆழ்ந்து வாழ எடுத்துக்கொள்ளும் பிரயத்தனமே சமயம் எனவும் கூறப்படுகின்றது. டாக்டர். இராதாக்கிருஷ்ணன் குறிப்பிடுகையில் சமயம் என்பது ஒரு வாழ்க்கை வழி என விளக்கம் தந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. சமூக வாழ்க்கையுடன் சமயம் தொடர்புறுகின்ற போது உண்மையைக் கண்டறிதலும் உண்மையை உய்த்தறிதலும் இதனுள் அடங்கும் பிரதான அம்சங்களாகின்றன. இங்கு தான் சமயம் என்னும் பதத்தின் பொருள் தெளிவாகின்றது. மனித மனத்தைப் புனிதமாக்கி நல்ல மனப்பாங்கை அமைத்துக் கொள்வதில் சமயமானது முக்கிய இடத்தினை வகிக்கின்றது. சமயங்களின் உட்கிடையே மண்ணில் நல்லவண்ணம் வாழ வழிகொடுத்து உதவுகின்றது. இது ஆன்ம ஈடேற்றத்திற்கு அவசியமானது. இவ்வகையில் பெண்களுக்கு சமயங்கள் வழங்கும் அங்கீகாரம் எத்தகையது? என்பதனை ஆய்வு செய்தல் இன்றைய நவீன உலகில் பெண்களின் வகிபாகத்தினைப் புரிந்து கொள்ள உதவுகின்றது. மேலும் உலக சமயங்களுள் இந்து, கிறிஸ்தவ சமயங்கள் பெண்களுக்கு எத்தகைய இடத்தினை வழங்குகின்றது என்பதை அறிந்து கொள்ளுதலே இவ்வாய்வின் பிரதான நோக்கமாகும். ஒவ்வொரு சமயமும் பெண்களுக்கு வெவ்வேறுபட்ட வகையிலேயே அந்தஸ்த்தை வழங்கியிருப்பதனை காணமுடிகின்றது. ஏனெனில் இஸ்லாத்தை விட இந்து மதப் பெண்களுக்கு அதிக சுதந்திரத்தை இந்து மதம் தருகின்றது என இந்துப் பெண்களும், இந்துப் பெண்களை விட நாம் தான் புத்தபிரான் வகுத்தபடியே சகல துறைகளிலும் ஆண்களுக்குச் சமமாக இருக்கிறோம் என பௌத்த பெண்களும், இவர்கள் எல்லோரையும் விட இயேசு போதித்த மதமே பெண்கள் மீது ஒருவித கட்டுப்பாடுகளை விதிக்கவில்லை என கிறிஸ்த்தவப் பெண்களும், இஸ்லாம் மற்றமதங்களை விட பெண்களை அதிகம் போற்றுவதனாலேயே பல கட்டுப்பாடுகளையும், பாதுகாப்பினையும் விதிக்கின்றது 61601 முஸ்லிம் பெண்களும் கூறியிருப்பதன் அடிப்படையில் அவதானிக்கமுடிகின்றது. பெண்களின் அந்தஸ்த்தானது வர்க்கத்தின் தோற்ற அடிப்படையிலேயே ஆரம்ப காலங்களில் இருந்து தீர்மானிக்கப்பட்டு வந்துள்ளமையை அவதானிக்க முடிகின்றது. இதுவரை காலமும் வணங்கப்பட்டு வந்த பெண் தெய்வங்களும் ஒன்றில் வழக்கில்லாது ஒழிந்தன. அல்லது புதிதாக உருவாக்கப்பட்ட ஆண்தெய்வங்களுக்கு மனைவியராக இரண்டாம் பட்சமாய்த் தள்ளப்பட்டன. தெய்வங்களும் உயர்வர்க்கங்களின் விம்பங்களிலே தான் உருவகிக்கப்பட்டன. பெண் தெய்வங்களும், ஆண் தெய்வங்களுக்குப் பணிவிடை செய்துகொண்டு கிடக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டன. ஒவ்வொரு சமயத்தினையும் தம் கட்டுப்பாட்டில் வைத்திருந்த வர்க்கங்களில் பெண்கள் என்ன அந்தஸ்த்தினை வகித்தாரோ அதே அந்தஸ்த்து அவ்வவ் சமயக் கோட்பாடுகளில் பெண்களிற்கு அளிக்கப்பட்டது. இதன் காரணமாகவே ஒவ்வோர் சமயக் கொள்கைகளிலும் பெண்களுக்கு வெவ்வேறான சலுகைகள் அளிக்கப்பட்டிருப்பதை நாம் காணமுடிகின்றது. விவிலிய வேதத்தில் பெண்கள் பல வழிகளில் ஆண்களுக்கு அடங்கிப் போகின்றவர்களாகவே சித்திரிக்கப்படுகின்றனர். கணவன்மாருக்கு மட்டுமன்றி தேவாலயத்திற்கும் தான் வாழுகின்ற சமூகத்திற்கும் அடங்க வேண்டியவர்களாகவே குறிப்பிடப்படுகின்றாள். எனினும் கிறிஸ்த்தவம் பெண்கள் விடயத்தில் முன்னேற்றகரமான போக்கினைக் கொண்டிருக்கிறது என்றே கூறமுடிகின்றது. இந்துமதம் பெண்களுக்கு வழங்கியுள்ள உரிமைகள் பற்றி நோக்கும் போது இந்துக்களின் முதல் நூலாகிய வேதங்களில் கூறப்படும் பால் நிலை சமத்துவம் பற்றிய கருத்துக்கள் மூலம் பெண்கள் மதிக்கப்பட்டதுடன் உயர் நிலையிலும் வைத்தெண்ணப்பட்டனர். எனினும் தொடர்ந்து வந்த மனுதர்ம சாத்திரத்தில் பெண்களின் வகிபாகம் தளர்வுற்றது. இத்தகைய நிலையில் இவ்வாய்வானது வரலாற்று முறை, ஒப்பீட்டு முறை மற்றும் பகுப்பாய்வு முறை என்பவற்றை ஆய்வு முறையியலாகக் கொண்டு பெண்களிற்கு இந்து. கிறிஸ்த்தவ சமயங்கள் வழங்கும் அங்கீகாரத்தை ஆராய்வதாக இவ்வாய்வு முன்னெடுக்கப்படுகின்றது. en_US
dc.language.iso other en_US
dc.publisher University of jaffna en_US
dc.subject பெண்கள் en_US
dc.subject சமயம் en_US
dc.subject கிறிஸ்தவம் en_US
dc.subject இந்து en_US
dc.subject அங்கீகாரம் en_US
dc.subject சமத்துவம் en_US
dc.subject வாழ்வியல் en_US
dc.title தமிழர்களின் வாழ்வியல் செல்நெறியில் பெண்களுக்கான அங்கீகாரத்தை வழங்குவதில் சமயங்களின் வகிபங்கு: இந்து கிறித்தவ சமயங்களை அடிப்படையாக கொண்ட ஒரு நோக்கு en_US
dc.type Conference paper en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record