| dc.description.abstract |
தமிழிலக்கிய பாரம்பரியத்தில் காவியங்களுக்கும் சிறப்பான இடமுண்டு. குறிப்பிட்ட காலப்பகுதிக்குரிய முக்கித்துவம் மிக்க இலக்கிய வடிவங்களாக இவை அமைகின்றன. தமிழ் நாட்டிலெழுந்த காவியங்கள், புராணங்கள் காட்டி நிற்கும் பண்பாட்டு மரபு போல ஈழத்திற்கென்றும் தனித்துவமான காவியமரபு, பண்பாட்டுமரபு ஓன்றும் உண்டு. அந்தவகையில் ஈழத்தில் முதன்முதலில் எழுந்த தமிழ்க் கிறிஸ்தவக் காப்பியமாக திருச்செல்வர் காவியம் விளங்குகின்றது. இத்தகைய சிறப்புக்களையுடைய பூலோக சிங்கமுதலியர் படைத்த திருச்செல்வர் காவியம் விளங்குகின்றது. இத்தகைய சிறப்புகளையுடைய பூலோக சிங்கமுதலியர் படைத்த திருச்செல்வர் காவியம் சிந்தனைக்கினிய கருத்தோவியங்களால் கவின்மிகு கற்பனை வளத்தால் உள்ளத்தைக் கவரும் உயிர்த்துடிப்பு மிக்க சொற்சித்திரங்களால் அழகு பெற்றுள்ளது. ஆசிரியரின் படைப்பாற்றல் பலவகையான இலக்கியதிறன்களல், உத்திகளால், உரமும் ஊட்டமும் பெற்றுள்ளன. பூலோக சிங்கமுதலியருடைய கலையுணர்வும் உணர்ச்சிப் பெருக்கும் கிறிஸ்தவ பண்பாட்டை நிலைநிறுத்தியுள்ளது. மேலும் இன்றும் வாழும் இலக்கியமாகப் புகழ்பெறச் செய்துள்ளது ன்பதே ஆய்வுக்கட்டுரையின் முதன்மை நோக்கமாகும். அத்தோடு இக்காவியம் தோற்றம் பெறுவதற்கு காரணமாய் அமைத்த சமுக் காரணிகள் குறித்தும் அதன் தோற்றப் பின்னனிகள் குறித்தும் தெளிவான அறிமுகத்தை வழங்குவதும் இவ் ஆய்வின் துணை நோக்கங்களாகக் கொள்ளப்பட்டன. |
en_US |