| dc.description.abstract |
இன்றைய நவீன உலகில் மனிதனுடைய வாழ்க்கை இயந்திரமயமாகவும்
தொழில்நுட்ப உலகம் நம்மை மனித உறவுகளை விட்டு அந்நியப்படுத்தி
மனிதர்களோடு இருப்பது போன்ற மாயையை நமக்குள் உருவாக்கி, நிழல் நட்புகளை
நிஜமென நம்பச் செய்துள்ளது. ஊடகங்கள் ஏதோ ஒரு வகையில் நேர்மறையாகவோ
அல்லது எதிர்மறையாகவோ மானுட சமூகத்தின் மீது பாதிப்பை ஏற்படுத்தவல்லன.
குறிப்பாகக் கொவிட் பெருந்தொற்றுக் காலத்தில் புதிய பல ஊடகங்களைக் கையாள
வேண்டிய நிலை ஏற்பட்டது. மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு இவை பெரும்
உதவியாக விளங்கியுள்ளமையும் எடுத்துரைக்கப்பட வேண்டிய விடயமாகும்.
அதனைத் தொடர்ந்து வந்த பின்னணியில் சமூக வலைத்தளங்களின் பாவனையானது
மாணவர்களிடையே பெரும் சவால்களை ஏற்படுத்தியுள்ளன. மேலும் வன்முறைக்
கலாச்சாரம், ஏற்றத்தாழ்வு, உளவியல் பாதிப்பு, உயிரைக் கொல்லுதல், பிறழ்வான
நட்பு, மறைப் பற்று இன்மை எனப் பல நிலைகளிலும் மாணவர் உருமாறியுள்ளனர்.
கத்தோலிக்க மாணவர்களின் ஆன்மீகத்தில் திரு அவைத் தலைவர்கள் பொறுப்புடன்
இருப்பது மேலான கடமையாகும். இதனை அடிப்படையாகக் கொண்டு திரு
அவையானது பல படிப்பினைகளையும் வழிகாட்டல்களையும் உருவாக்கியுள்ளது.
ஆய்வானது திரு அவையினால் வழங்கப்பட்டுள்ள கட்டளைகளில் முதலாவது
கட்டளையான ‘ஞாயிறு மற்று கடன் திருநாட்களில் திருப்பலியில் பங்கேற்றல்’
வேண்டும் என்னும் திரு அவையின் முதலாவது கட்டளையை அடிப்படையாகக்
கொண்டு அமையப்பெற்றுள்ளது. இத்திருப்பலி கத்தோலிக்க கிறிஸ்தவ மக்களின்
சிறப்பானதும் தனித்துவமானதுமான வழிபாடாக அமைகின்றது. ஆய்வானது ஞாயிறு
திருப்பலியின் புனிதத் தன்மையை உணராது அதற்கு ஈடாக கைத்தொலைபேசிப்
பாவனைகளில் நேரத்தைச் செலவிடும் கந்தரோடை கிராமத்து இடைநிலை வகுப்பு
கத்தோலிக்க மாணவர்களை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கொன
கள ஆய்வு மூலம் வினாகொத்து, அவதானிப்பு, நேர்காணல் முறைகளில் தரவுகள்
சேரிக்கப்பட்டு, பெறப்பட்ட விடயங்கள் பகுப்பாய்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
ஆய்வின் முடிவாக சமூக வலைத்தளங்களை கல்வித் தேவைக்கு மட்டும் பயன்படுத்தப்
பெற்றோர் ஆவண செய்தல் வேண்டும். சமூக வலைத்தளங்களின் முறையான
பாவனைக்கு வழிகாட்டும் செயற்றிட்டங்கள் மாணவர்களைக் கல்வியிலும்
ஆன்மீகத்தி;லும் ஈடுபடுத்த உதவியாக அமையும். பெற்றோர் வீடுகளில் பிள்ளைகளை
தம் நடத்தைகள் வாயிலாகத் திருத்துதல், ஆசிரியர்கள் ஒழுக்கங்களையும் வாழ்விற்கு நன்மை பயக்கும் விடயங்களையும் கற்றுக் கொடுத்தல் அவசியம் போன்ற
விடயங்களை ஆய்வானது பரிந்துரைக்கிறது. |
en_US |