DSpace Repository

சவால்மிக்க உலகில் பல்சமய உறவும் உரையாடலும்: யாழ்ப்பாண மாநகரசபைக்குட்பட்ட J/84 - 87 வரையான கிராம அலுவலர் பிரிவுகளை மையப்படுத்திய பார்வை

Show simple item record

dc.contributor.author Sakayaseelan, A.
dc.date.accessioned 2026-01-14T04:23:00Z
dc.date.available 2026-01-14T04:23:00Z
dc.date.issued 2024
dc.identifier.uri http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12005
dc.description.abstract உரையாடல் இல்லையேல் இன்று உலகமே இல்லை உரையாடலின் வழியாக எத்தனையோ பிரச்சனைகளும் யுத்தங்களும் தவிர்க்கப்படுகின்றன. கிறிஸ்தவ சாட்சிய வாழ்விற்கு பிற சமயங்களுடான உரையாடல் இன்றியமையாதது. ஆரம்ப காலத்தில் திருத்தந்தைகளான ஜஸ்டின் ஜெரோம் அகஸ்டின் யோரோம் போன்றோர் பிற சமயங்களுடன் உரையாடல்களை மேற்கொண்டனர் ஆனாலும் முதலாம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட சிலுவை போரினாலும் அரசியல் நீதி பணிக்கும் சமய உறவு பணிக்கும் உள்ள தொடர்பு இந்து மயமாகத்தினாலும் பிற சமய உரையாடல்கள் குறைவடைந்தன. நற்செய்தி பணிக்கும் சமய உறவு பணிக்கும் உள்ள தொடர்பு இன்றியமையாதது. 1962 -1965 வரை நடைபெற்ற இரண்டாம் மற்றும் இரண்டாம் வத்திகான் சங்கத்தின் வழியாக திரு அவைக்கு வெளியேயும் மீட்பு உண்டு என்னும் மாற்று சிந்தனையால் திரு அவையின் கதவுகளும் ஜன்னல்கலும் அகல திறந்து புதுப்பிக்கப்பட்டது. இந்த ஆய்வு பிரதேசமாகிய J/84-87 வரையான கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் பிற சமய உறவும் உரையாடலும் மோலோஙாகி காணப்பட்டது.இதற்கு எஸ். ஜே இம்மானுவேல் அவர்களால் 1986-1996 களில் உருவாக்கப்பட்ட நற்சமுக நடுநிலையப் தக்க சான்றாகும். ஆனால் இந்த முயற்சி சமகாலத்தில் திருவினையாக்கவில்லை. இதற்கான காரணம் என்ன? என்பதை கண்டறிவதே இவ்வாய்வுக்கான பிரச்சினையாகும். இந்த காரணங்களை அறிந்து அவற்றை நற்செய்தியின் ஒளியில் புரியவைப்பது சமகாலத்தில் தேவைப்பாடாகும். பல் சமய சூழலில் வாழ்ந்துவரும் J/84-87 வரையான கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட கிறித்தவ சமூகம் ஏனைய சமயங்களின் நல்ல கருத்துக்களை அறிந்து மதிப்பளித்து சமகால உலகின் சவால்களை எதிர்கொண்டு எதிர்காலத்தில் சமய பேதங்களற்ற சமத்துவம் பேணும் மக்கள் சமூகமாக வாழ வழிப்படுத்துவதே இந்த ஆய்வின் பிரதான நோக்கமும் இலக்கு பாகும். கிறித்தவ. இந்து மற்றும் இஸ்லாமிய சமயத்தை விடய வரையறையாக கொண்டமைக்கு இந்த ஆய்விலே தொகுந்தறிவு, வரலாற்று அவதானிப்பு ஆகிய முறைகள் கையாளப்பட்டுள்ளது. சமயங்களின் உறவும் உரையாடலும் தொடர்பான இன்றைய நிலைப்பாடு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. தன்னுடைய சமய நம்பிக்கையில் உறுதியற்ற நிலையும் பிற சமயங்கள் பற்றிய தற்பாதுகாப்பு முயற்சியும் ஏ இன்றைய சமய உரையாடலுக்கு தடையாக விளங்குகின்றன என்பது ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இதனை சீர்செய்ய சமயங்களின் ஐயமே சமரச உரையாடலை மேற்கொண்டு பிற சமயங்களில் காணப்படும் பக்தி பாடல்கள் திருநூல்கள் அறக்கருத்துக்கள் என்பவற்றை அடியொற்றி தேசிய விழாக்கள் பொது நிகழ்வுகள் விளையாட்டுக்களை சமயங்கள் கடந்த நிலையில் அனுசரித்து பிற சமயங்கள் பற்றிய தவறான கருத்துக்களை களைந்து தம் சமயத்தை பிறர்மேல் தினிப்பதை தவிர்ப்பது அவசியமாகும். சமயங்களின் உறவும் உரையாடலும் சமகால வாழ்வின் சவால்களை வெற்றிகொள்ள வழிவகுக்கும் என்பதே இவ் ஆய்வின் பயனாகும் en_US
dc.language.iso other en_US
dc.publisher University of jaffna en_US
dc.subject பல்சம உறவு en_US
dc.subject பல்சமய உரையாடல் en_US
dc.subject இரண்டாம் வத்திக்கான் சங்கம் en_US
dc.subject நற்சமூக நடுநிலையம் en_US
dc.subject சமரச உறவு en_US
dc.title சவால்மிக்க உலகில் பல்சமய உறவும் உரையாடலும்: யாழ்ப்பாண மாநகரசபைக்குட்பட்ட J/84 - 87 வரையான கிராம அலுவலர் பிரிவுகளை மையப்படுத்திய பார்வை en_US
dc.type Conference paper en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record