Abstract:
வரலாற்று ரீதியில் பார்க்கையில் கிறிஸ்தவ சமயமானது பல வேத
கலாபனைகளைக் கடந்து வந்துள்ளது. வேத கலாபனைகளுக்கும் பேதகங்களுக்கும்
முகம் கொடுத்து இயேசுவின் பாதையில் கடந்த இரண்டாயிரம் வருடங்களாக
யாவரையும் அழைத்துச் செல்ல முயல்கிறது. இலங்கையிலே 17ஆம் நூற்றாண்டில்
மன்னார் மறைசாட்சிகள் கிறிஸ்துவின் மீதான நம்பிக்கைக்காகத் தமது உயிரைக்
கையளித்தனர். இந்த வரிசையில் 2019ம் ஆண்டு சித்திரை மாதம் 21ஆம் திகதி
உயிர்த்த ஞாயிற்றுக்கிழமைத் தாக்குதல் ஒரு மறைசாட்சிய நிகழ்வாகப் பார்க்கப்படக்
கூடிய சாத்தியத் தன்மை உள்ளது. இலங்கை அரசானது ஒரு பல்லின சமூக
அமைப்பைக் கொண்டதாகும். இந்நாட்டில் 7.4 சதவீதமாக வாழும் கிறிஸ்தவர்களின்
முக்கிய நாளான உயிர்த்த ஞாயிறு தினத்திலே நடாத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில்
வெளிநாட்டவர்கள் உள்ளடங்களாக 259 பேர் கொல்லப்பட்டதுடன் நூ
ற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். ஆய்வின் நோக்கங்களாக உயிர்த்த ஞாயிறுத்
தாக்குதலின் உண்மைத் தன்மையைக் கண்டறிதல், தாக்குதலின் விளைவுகளை
ஆராய்தல் மற்றும் தாக்குதலின் பின்னர் மக்களின் கடவுள் நம்பிக்கையில் ஏற்பட்ட
மாற்றங்கள் தொடர்பான விடயங்களை முன்வைத்தல் என்பன அமைகின்றன. இவ்
ஆய்வானது பண்பு ரீதியான விமர்சனப் பகுப்பாய்வாக அமைகிறது. இதற்கான
தரவுகள் இரண்டாம் இரண்டாம் நிலைத் தரவுகளான ஆய்வறிக்கைகள், இணைய,
அச்சு, இலத்திரனியல் ஊடகங்கள், அரச ஆவணங்கள் போன்றவற்றின் ஊடாகப்
பெறப்பட்டுள்ளன. ஆய்வாளரின் தனிப்பட்ட ஆய்வுகளினூடாகவும் பெறப்பட்ட
தரவுகள் பயன்படுத்தப்பட்டு, பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இத்தாக்குதல்கள்
நாட்டின் பாரிய அரசியல், சமூக, சமய, பொருளாதார ரீதியிலான தாக்கங்களை
ஏற்படுத்தியுள்ளன. உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் இலங்கையிலுள்ள கிறிஸ்தவ
மக்களை மாத்திரமன்றி உலக வாழ் கிறிஸ்தவ மக்கள் மத்தியிலும் பல வழிகளிலும்
தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இவற்றை மையமாகக் கொண்டு இவ் ஆய்வு
முன்னெடுக்கப்படுகிறது.