| dc.description.abstract |
சமூகத்தின் வளர்ச்சிக்குப் பதின்ம வயதினரின் சமூக வகிபாகம் மிக
முக்கியமாகக் காணப்படுவதால், பதின்ம வயதினரைப் பாதுகாக்க வேண்டிய
கட்டாயத் தேவை உள்ளது. ஆயினும் சமூகத்தைப் பாதிக்கும் சமூகப் பிரச்சினைகள்
இன்றைய பதின்ம வயதினரின் வாழ்வில் அறநெறிப் பிறழ்வை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக நகர்ப்புறங்களிலுள்ள சேரிப்புற பதின்ம வயதினர் வாழ்வில் பின்னடைவான
அறிநெறியைக் கொண்டிருப்பது சமூகத்தின் வளர்ச்சிக்கு பெரும் சவாலாக
அமைகின்றது. அறநெறிப் பிறழ்வானது பதின்ம வயதினர் வாழ்வில் அதிகளவில்
தாக்கம் செலுத்தியுள்ளதை அவதானிக்க முடிகின்றது. எனவே கொழும்பு ஜிந்துபிட்டி,
பிரதேசத்தை மையப்படுத்திய, பதின்ம வயதினரின் அறநெறிப் பிறழ்விலிருந்து
அவர்களை மீட்டெடுப்பதும், எதிர்காலத்தில் ஆரோக்கியமான சமூகம் இப்பிரதேசத்தில்
உருவாக்கப்படுவதுமே இந்த ஆய்வின் பிரதான நோக்கமாகும். இந்நோக்கத்தினைத்
திறம்பட மேற்கொள்ளும் வகையில், அறநெறிப் பிறழ்வில் செல்வாக்குச் செலுத்தும்
காரணிகளான அவர்களது பின்னணி, மக்கள் குழுக்கள், கலாச்சாரம், வாழ்வாதாரம்,
பண்பாடு, என்பன வரலாற்று ரீதியாக ஆராயப்பட்டு, ஆவண மற்றும் கள ஆய்வு
முறை, ஆய்வுக் கட்டுரை நூல்கள், வினாக்கொத்து, அறநெறிப் பிரச்சினைக்கான
அக, புற நிலைகள் மற்றும் இப்பிரதேச வாழ் மக்களுடனான நேர்காணல்
என்பனவற்றால் பெறப்பட்ட தரவுகள் விபரண, பகுப்பாய்வு முறைகளில்
மேற்கொள்ளப்படவுள்ளன. இவ்வாறான ஆய்வினை மேற்கொள்வதன் மூலம் பதின்ம
வயதினர், தங்கள் வாழ்வில் கிறிஸ்தவ அறநெறியில் வளருவதற்கேற்றச் சூழமைவைக்
கொண்டிருக்க முடியும் என்பதுவும், நம் முன்னோர்கள் அறம், பொருள், இன்பம், வீடு
என வாழ்ந்த நற்பண்புகளைக் கடைப்பிடித்து வாழ்ந்ததுபோல, இப்பிரதேச எதிர்காலப்
பதின்ம வயதினரும் நன்நெறியில் வாழ முடியும் என்பதும் ஆய்வின் வலுவான
கருதுகோளாகும். இதன் அடிப்படையில் பாதுகாக்கப்பட வேண்டிய மனிதர், புதுப்பிக்க வேண்டியது மானிட சமுதாயம் எனும் நிலைக்கு ஒவ்வொரு பதின்ம வயதினரும்
கடவுளது உரியத் திட்டத்திற்கு அமைவான, ஓர் சிறந்த சமூகத்தை உருவாக்கும்
ஊடகமாக மற்றும் பயனுள்ளதுமான பிரஜையாக நிறுத்த முடியும் என்பது
இவ்வாய்வின் குறிக்கோளாகும். பண்டைய தமிழரிடையே ‘அறம்’ எனும் சொல்
வாழ்க்கையோடு ஒன்றிணைந்து காணப்பட்டது. ‘அறம் செய்ய விரும்பு’ என்பது
மூதாதையர் உரை. இதனடிப்படையில் பொதுவாக எதிர்கால மனிதன் தனக்கென
வரையறுத்துக்கொண்ட ஒழுக்க முறைகளைக் கடைப்பிடிப்பதற்கான வலுவூட்டல்
ஆய்வில் முன்வைக்கப்பட்டுள்ளது. |
en_US |