| dc.description.abstract |
போதைப் பொருட்களின் பாவனையானது உடல், உள, சமூக நலத்திற்கு
கேடு விளைவிக்கும் செயற்பாடாகும். தற்போது இந்நிலை விரிவடைந்து கட்டிளமைப்
பருவத்தினரைப் பாதிப்புக்கு உள்ளாக்குகின்றது. இதற்கான காரணம் என்ன என்னும்
வினா ஆய்வை மேற்கொள்ள வழிவகுத்தது. போதைப்பொருள் பாவனைக்கு
அடிமையான நிலையில் உள்ள கட்டிளமை பருவத்தினரின் வாழ்க்கை முறையைக்
கிறிஸ்தவக் கண்ணோட்டத்தில் நோக்கி அவர்கள் மத்தியில் விழிப்புணர்வை
ஏற்படுத்துவது ஆய்வின் மைய நோக்கமாகும். இதற்கென எசாயா இறைவாக்கினர்
நூலை மையப்படுத்தி, அதன் எடுத்துரைப்புகளுக்கு அமையப் போதைப்பொருள்
பாவனை இன்றி இளைய தலைமுறையின் எதிர்காலம் எவ்வாறு அமைய வேண்டும்
என்பதை முன்வைக்கும் விதத்தில் ஆய்வு அமையப் பெற்றுள்ளது. பண்பு ரீதியான
இவ்வாய்வானது முதலாம் மற்றும் இரண்டாம் நிலைத் தரவுகளைத் தொகுத்து
விபரண ஆய்வு முறையைப் பயன்படுத்துகின்றது. இவ் ஆய்வுக்காக முதலாம்
நிலைத் தரவுகள் மானிப்பாயில் உள்ள இரண்டு தேசிய பாடசாலையின்
அதிபர்களிடமும் ஆசிரியர்களிடமும் மாணவர்களிடமும் நேர்காணல் மூலம்
பெறப்பட்டதோடு பாடசாலைகளின் அதிபர்களிடம் இருந்து பாதிப்படைந்த
மாணவர்களின் எண்ணிக்கையும் பெறப்பட்டது. ஆய்வுக்கான கோட்பாட்டுத்
திட்டங்களை நிறுவுவதற்கு இரண்டாம் நிலைத் தரவுகளாக நூல்கள், சஞ்சிகைகள்,
பத்திரிகைகள் என்பன மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆய்வில் போதைப்பொருள் பாவனையால் கடந்த காலம் எம் தலைமுறையினர்
எதிர்நோக்கும் அடிப்படை விளைவுகளான மாணவர்களின் கல்வி, எதிர் கால வாழ்வு
பாதிக்கப்படல், உடல் நலம் பாதிக்கப்படுதல், நோய்களுக்கு உள்ளாகுதல், சுய
மதிப்பு மறுக்கப்பட்டு சமூகத்தால் புறம் தள்ளப்படல், இறுதியில் மாணவர்களை மரணத்துக்கே கொண்டு செல்கிறது போன்ற விளைவுகள் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
மானிப்பாய் பிரதேசத்தில் போதைப்பொருள் பாவனையைத் தடை செய்யும்
செயற்திட்டங்கள் முன்வைக்கப்பட்டாலும் போதைப்பொருள் பாவனையை முற்றாக
ஒழிக்கும் செயற்திட்டங்கள் இன்று வரை முன்வைக்கப்படவில்லை என்பது ஆய்வினூ
டாக அடையாளம் காணப்பட்டுள்ளது. முடிவுகளாகப் போதைப்பொருளுக்கு
அடிமையான இளைய தலைமுறையின் வாழ்விற்குத் தேவையான
முன்னெடுப்புக்களையும் அவர்கள் எதிர்கொள்ளும் பாதிப்பையும் பதிவு செய்வதன்
மூலம் எதிர்கால இளைய தலைமுறையினர் மத்தியில் விழிப்புணர்வு சார்ந்த
செயற்திட்டங்களை முன்னெடுக்கலாம். போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாக்கும்
காரணங்களை இனங்கண்டு இளைய தலைமுறையின் மத்தியில் அவற்றைக்
கட்டுப்படுத்த முயற்சியெடுத்தல் வேண்டும். மேலும் பாதிப்படைந்த மாணவர்களின்
வாழ்வை மறுசீரமைத்து சமூகத்தோடு அவர்களும் சமமான அங்கீகாரம் பெற்று வாழ
வாய்ப்பு ஏற்படுத்த முயற்சித்தல், போதைப்பொருள்கள் தொடர்பான பாடத்திட்டங்களைப்
பாடசாலை, பல்கலைக்கழகங்களில் கட்டாய கற்கைகளாக மாற்றுவதன் மூலம்
எதிர்கால சமூகத்தின் உடல், உள, சமூக நல வாழ்வை உறுதி செய்யலாம்
போன்ற விடயங்கள் ஆய்வில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. |
en_US |