DSpace Repository

இணைக்கலைத்திட்ட செயந்பாடுகளின் பண்பாட்டு விழுமியங்கள் இணையவழிக் கையளிப்பில் எதிர்நோக்கும் சவால்கள்

Show simple item record

dc.contributor.author Muththuraja, T.
dc.contributor.author Karuna, K.
dc.date.accessioned 2025-03-11T06:51:46Z
dc.date.available 2025-03-11T06:51:46Z
dc.date.issued 2022
dc.identifier.isbn 978-624-5954-02-5
dc.identifier.uri http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/11155
dc.description.abstract பயனுறுதிவாய்ந்த சிறந்த பண்பாட்டு விழுமியங்களுடன் கூடிய கல்வி மாணவர்களின் வளர்ச்சியில் ஒப்பிட முடியாத அடித்தளத்தை எடுத்துக் கொடுக்கிறது. புதிய கல்வி சீர்திருத்த்த்தின் அடிப்படையில் மாணவர்களுக்கு இணையவழிக் கற்றலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதனால் தற்போது கல்வி அபிவிருத்தியானது வெயற்திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு கற்றல்- கற்பித்தல் முறையாக விருத்தியடைந்து வருகிறது. மாணவர்களை சிறந்த தேர்ச்சிகளை அடையச்செய்து அவர்களை மாற்றமுறும் உலகின் சிறந்த பிரசைகளாக மாற்றுவதில் கல்வியின் பங்கு மிக முக்கியமானது. மாணவர்களுடைய வாழ்கையைத் தீர்மானிப்பது அவர்களுக்கு கிடைக்கப்பெற்ற ஆசிரியர்களே என்பதனை எவருமட மறுக்க முடியாது. ஆசிரியர்களின் வாண்மைச் சிறப்பு வெளிப்படவும் கற்றல்- கற்பித்தல் செயற்பாடு வெற்றிபெறவும் அவர்கள் காலத்திற்கு காலம் தங்களை புதுப்பித்துக் கொள்வது அவசியமானதொன்றாகும். இதன் அடிப்படையில் தற்கால சூழ்நிலையின் அடிப்படையில் இணையவழிக் கற்றல்- கற்பித்தல் செயற்பாடுகள் தொடர்பாக ஆசிரியர்கள் மத்தியில் காணப்படும் சவாலான நிலமைகள் ஆய்வுக்குட்டுத்தப்பட்டுள்ளன. இணைக்கலைத்திட்டம் கட்டமைப்பிலும் கற்ப்பித்தலிலும் வினைத்திறனுடையதாக மாற்றமுற்று வருகிறது. இதனை அடையச்செய்ய வேண்டியது ஆசிரியரின் பொறுப்பாகும். ஆய்வுக்குடித்தொகையில் உள்ளடங்கும் மாணவர்களது தயக்கங்களை வெளிக்கொணரக் கூடிய வகையில் ஆய்வு வினாக்களை உருவாக்கி அவற்றை ஆய்வு செய்தல், இணையவழிக் கற்பித்தலின் இயல்புகள், திட்டமிடல், பங்குபற்றுனரின் செயற்பாட்டு நிலை, வசதி வாய்ப்புக்கள் என்பவற்றை விளக்குவதோடு தரவுப் பகுப்பாய்வு முறையாக பண்புசார் முறை பயன்படுத்தப்பட்டுள்மையால் இவ்வாய்வு விபரண ஆய்வாக வடிவமைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள யாழ்ப்பாண வலயத்திற்குட்பட்ட கோப்பாய்க் கோட்ட இடைநிலை 10 பாடசாலைகளை ஆய்வு மாதிரியாகத் தெரிவு செய்யப்பட்டு அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களிடமிருந்து வினாக்கொத்து, நேர்காணல், அவதானிப்பு, ஆவணங்கள் ஆகியவற்றின் மூலம் தரவுகள் பெறப்பட்டு ஆய்வுக்குட்படுத்தப்பட்டது. இவ்வாய்வுக்குட்படுத்தப்பட்ட பாடசாலைகளில் இணையவழிக் கற்றல்- கற்பித்தல் பற்றி அறிக்கை நேர்த்தியான முறையில், வினைத்திறனான கற்றல்- கற்பித்தல் இடம்பெற்றமைக்கான ஆதாரங்கள் காணப்படவில்லை. மேலும் இணையவழிக் கற்றல் உபகரணங்கள் பாட செயற்பாட்டிற்கு ஏற்றவாறு திட்டமிட்டு ஒழுங்கப்பதில் சங்கீத, நடன ஆசிரியர்களின் வினைத்திறன் மேலும் வலுவுட்டப்பட வேண்டிய நிலையிலேயே காணப்பட்டதை அவதானிக்கக் கூடியதாக காணப்பட்டது. வகுப்பறையில் இணையவழிக் கற்றல் சாதனங்களின் ஒழுங்க்மைப்பின்மை, ஆசிரியருக்கு மேசைக்கணினி, மடிக்கணினி, மற்றும் கையடக்கத்தொலைபேசி போன்ற சாதனங்களினுடாக இணையவழிக் கற்பித்தலை மேற்கொள்வது தொடர்பான போதிய தெளிவின்மை. முன்னாயத்தமின்றி பாட செயற்பாடுகளை முன்னெடுத்தல். மாணவர்களுக்கு ஏற்ற முறையில் பாட உள்ளடக்கத்தினை திட்டமிட்டு நேர வரையறைக்குட்பட்டு மாணவர்களுக்கு எழும் சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் முறைமைகளைப் பயன்படுத்தாமை. அனைத்துப் பாடங்களையும் ஒரேமாதிரியாக விரிவுரைமுறைக் கற்பித்தலை பயன்படுத்துதல் மற்றும் செய்முறைப் பாடத்தின் போது ஏற்படுகின்ற தாமதங்கள் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமுகமாக இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. en_US
dc.language.iso other en_US
dc.publisher Eastern University, Sri Lanka en_US
dc.subject இணைக்கலைத்திட்டம் en_US
dc.subject பண்பாட்டு விழுமியங்கள் en_US
dc.subject மெய்நிகர் வகுப்பறை en_US
dc.title இணைக்கலைத்திட்ட செயந்பாடுகளின் பண்பாட்டு விழுமியங்கள் இணையவழிக் கையளிப்பில் எதிர்நோக்கும் சவால்கள் en_US
dc.type Conference paper en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record