Abstract:
பண்பாட்டு அடிப்படையில் யாழ்ப்பாணத்திற்கு ஆண்டுகளுக்குக் குறையாத தொன்மையான பாரம்பரிய வரலாறு உண்டு. இலங்கையில் குறிப்பாக யாழ்ப்பாணம் பண்டு தொட்டுத் தனி ஒரு பிராந்தியமாக வரலாற்று மூலங்களில் அடையாளப்படுத்தப்பட்டு வந்துள்ளது. இங்கு இசையை இரசிக்கும் மன்னர்களும் மக்களும் வாழ்ந்திருக்கிறார்கள். அரண்மனைகள், கோயில்கள் கலை வளர்வதற்கேற்ற அரங்கினைக் கொடுத்திருக்கின்றன. மன்னர்கள் தமிழிலும் இசையிலும் ஆர்வமுள்ளவர்களாகவும், புலமை உள்ளவர்களாகவும் இருந்துள்ளார்கள். புலவர்களை ஆதரித்துப் போற்றியுள்ளார்கள். இதன் காரணமாக சிறந்த இலக்கியங்கள் தோற்றம்பெற்றுள்ளன.
இவற்றிற்கு ஆதாரமாக செகராசசேகர மன்னனின் காலத்து யாழ்ப்பாணத்து இசைமரபைப்பற்றி இக் கட்டுரையில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. இவ் ஆய்வு, நூல்களை மூலமாகக் கொண்டு விவரண ஆய்வுமுறை மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழ் மன்னர் காலத்தில் யாழ்ப்பாணத்தில் செழிப்பான இசைமரபு ஒன்று இருந்திருக்கிறது என்கின்ற கருதுகோள் முன்வைக்கப்படுகின்றது.