dc.description.abstract |
ஈழத்திரு நாட்டில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தமிழ் மக்கள் தங்களது வாழ்கையில் தொன்றுதொட்டு
பல கலை, கலாசார பாரம்பரிய மரபுகளைத் தம்மகத்தே கொண்டு வாழ்ந்து வருகின்றனர். சடங்குகள்
மட்டக்களப்பு மக்கள் வாழ்வில் மிக முக்கியமானதொரு சமூக, சமய நிகழ்வாக நோக்கப்படுகின்றன.
சமூகங்கள் காலத்திற்குக் காலம் சமூக வளர்ச்சியில் மற்றங்களைப் பெற்று வளர்ச்சியடைந்து நாகரிக
சமூகங்களாக மேம்பட்டுக்கொண்டாலும் சமூகங்களில் நிலைகொண்டுள்ள சடங்குகளுடன் தொடர்புடைய
ஆடல்கள் பல உயிர்ப்பான அம்சங்களை உள்ளடக்கிய வடிவங்களாகத் தொழிற்படுகின்றன.
அந்தவகையில் இந்த ஆய்வு மட்டக்களப்பில் சடங்குக்காக ஆற்றுகை செய்யப்படும் கரகாட்டம் தொடர்பாக
ஆராய முற்படுகின்றது. மட்டக்களப்பில் சடங்குக்காக ஆற்றுகை செய்யப்படும் ஆடல் வடிவங்கள் பற்றி
நாடக ஆய்வாளர்களினால் நாடகம் சார் நோக்கிலே ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. நடனம் சார்
நோக்குடன் இவை ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை. இவற்றை அந் நோக்குடன் ஆய்வு செய்கின்ற
போது கரகாட்டத்தின் ஆட்டக்கோலங்கள் எவ்வகைப்பட்டன, இவற்றின் அழகியல் என்ன? இக் கலை
வடிவங்கள் தமிழ் மக்களின் வரலாற்றோடு எவ்வாறு முக்கியம் பெறுகின்றன என்பன பற்றியெல்லாம்
அறிய முடியும். சமகாலத்தில் மட்டக்களப்பு சமூகத்தில் நிகழ்த்தப்படும் சடங்குகள் பற்றிய
அவதானிப்புக்களை அடிப்படையாக்கொண்டு ஆய்வு முடிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம்
கரகக்தின் அழகியல் மரபின் இடையறாத்தொடர்டச்சியும் அவற்றின் இயல்புகளும் விவாதிக்கப்பட்டு
எடுத்துரைக்கப்பட்டள்ளன. இது ஒரு பண்புசார், விவரண ஆய்வாக அமைந்துள்ளது. மட்டக்களப்புப்
பிரதேச சடங்குதொடர்பான நேரடி அவதானிதானிப்புத் தகவல் வழங்கிகளினூடாகவும் குழுநிலைக்
கலந்துரையாடல்கள் என்பன தகவல்களை உறுதிப்படுத்த ஆய்வுக்கருவிகளாகப்
பயன்படுத்தப்பட்டுள்ளன. பண்புசார் அடிப்படையில் முடிவுகள் பெற்றுக்கொள்ளப்பட்டிருப்பதுடன்
பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டுள்ன. தமிழர் பாரம்பரியத்தில் சடங்குகள் காலம் காலமாக கரகத்தில் ஒரு
அழகியல் மரபு பேணப்பட்டு வந்துள்ளது என்பது ஆய்வின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பாரம்பரியக்கலைகள் வயோதிபர் மத்தியில்தான் காணப்படுகின்றன. இதற்கான பதிப்புக்கள் போதிய
அளவில் இல்லை. இன்றைய காலகட்டத்தில் சடங்கு சம்பிரதாயங்கள் மறைந்துகொண்டிருப்பதால் கிராமிய
நடனங்கள் ஆங்காங்கே சிதறிக்கிடப்பதைக் காணக்கூடியதாக இருப்பது என்பது வருந்தக்கூடிய
விடயமாகும். எனவே இவ் ஆய்வு சடங்குகள் தொடர்பாக இதுவரை காலமும் செய்யப்பட்ட ஆய்வு
முறமைகளிலிருந்து வேறுபட்டுக் கரக ஆட்டத்தை நடனம் சார்ந்த நோக்கில் ஒரு சடங்கியல் ஆய்வாக
வேறுதளத்திற்கு கொண்டு சென்றுள்ளது. |
en_US |