DSpace Repository

தமிழர் ஆடற்கலை- ஈழத்து சமூகப் பண்பாட்டு நோக்கு

Show simple item record

dc.contributor.author Kirubairaja, A.
dc.date.accessioned 2024-10-25T07:40:47Z
dc.date.available 2024-10-25T07:40:47Z
dc.date.issued 2024
dc.identifier.uri http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/10823
dc.description.abstract ஒரு நாட்டின் மொழி எவ்வளவு தொன்மை வாய்ந்ததோ அதே போன்று அந் நாட்டின் கலைகளும் தொன்மை வாய்ந்தவையாகும். இக் கலை வடிவங்கள் அந்தந்தச் சமுதாயத்தின் நாகரிகம் மற்றும் பண்பாட்டோடும் இணைந்தவையாகும். ஒரு நாட்டினுடைய பாண்பாட்டு மூல வேர்களை அறிந்துகொள்வதற்கு அந் நாட்டின் கலைப்பாரம்பரியம் உறுதுணை புரிகின்றது என்றால் அது மிகையன்று. இந்த ரீதியில் ஈழத்துது தமிழ் மக்களுடைய gண்பாட்டு பழக்க வழக்கங்களையும் பண்பாட்டு அம்சங்களையும் விளங்கிக்கொள்வதற்காக தமிழ்ப் பிரதேசங்களில் வழங்கி வந்த தமிழர் கலைப்பாரம்பரியங்களை ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கமாகும். வரலாற்றுத் தேவை நோக்கி நமது நாட்டிலுள்ள இனக்குழு மக்களின் தனித்துவமான மரபுவழி அடையாளங்கள், பண்பாட்டுப்பெறுமானங்கள் அவற்றினூடாகத் துல்லியப்படும் அடையாளங்கள் என்பனவற்றைக் கொள்ளக்கூடியதாக எமக்கெ சாஸ்திரிய ஆடல் வடிவம் செயற்படுத்தப்பட வேண்டும். இந் நிலையில் எமது தனித்துவமான கலாசரத்திற்குரிய குறியீடுகள் உள்ளனவா? இருந்தால் அவை எவை? அதன் அடையாளங்களை எப்படித் துல்லியப்படுத்துவது? அல்லது எதற்கூடாகத் துல்லியப்படுத்துவது? போன்ற வினாக்கள் ஈழத்தமிழரை நோக்கி எழுகின்றது. இந்த வினாக்குளுக்கு விடை தேட முற்படும் போது குறிப்பிட்ட இனக்குழுமத்தின் மத்தியில் உள்ள கலை வடிவங்களுக்கூடாகத்தான் துல்லியப்படுத்த முடியும். வடமொழி ஆடற்கலை தமிழருக்குரிய ஆடல் வடிவமில்லை என்பதே இங்கு ஆய்வுப்பிரச்சினையாக முன்வைக்கப்படுகின்றது. ஈழத் தமிழர் தமக்கெனக் கலை பண்பாட்டுப் புலங்களிலும் தமக்கான தனித்துவமான தமிழ் ஆடல் அடையாளம் இருப்பதைத் தக்கவைத்துக்கொண்டுள்ளார்கள் என்பதே இவ. ஆய்வின் கருதுகோளாகும். ஈழத்தமிழ்ச் சூழலில் உருவான கலைவடிவங்களில் எஞ்சியுள்ள ஆடற்கோலங்களை மீட்டெடுக்க வேண்டியவர்களாகவும் இதனை , ஆற்றுகை,அறிகை, ஆய்வுப்புலமை நிலையில் விரிவாக்கம் செய்ய வேண்டிய நிலையில் இருக்கும்போது, தமிழ் ஆடற்கலை என்பதை தமிழ் மரபுடனும் தமிழர் வாழ்வுடனும் இணைத்து சித்தரிக்கும் மரபினைத் தொலைத்து பொது வெளியைக்கட்டமைத்து நாட்டார் நடனங்கள் என்ற பெரும் தளத்திலிருந்துதான் கற்கைநெறி முறைப்படுத்தப்பட்ட நடனங்கள் சாஸ்திரிய நடனங்களாக முகிழ்ந்து எழுந்துள்ளன என்பதையும் மறந்து, இடைக்காலத்தில் வளர்ச்சியுற்ற வரன் முறையான கல்விச்செயற்பாடுகள் நாட்டார் மரபுகளையும் கலை வடிவங்களையும் தமது வீச்சுக்குள் கொண்டுவரத்தவறிவிட்டனர். படித்த மேட்டுக்குடி மனப்பாங்கு சார்ந்த கலை வடிவமாக வடமொழி ஆடற்கலையை நோக்கும் மனநிலையிலிருந்து முதலில் விடுபட வேண்டும். சாதாரண கிராமப்புற விளிம்புநிலை மக்களின் கலையாகவும் தமிழ் ஆடற்கலையை மீட்டெடுப்பது அவசியமாகும். சமகாலத்தில் நாட்டார் கலைகள், கிராமப்புறக்கலைகள் குறித்த புதிய மடை மாற்றம் செய்யப்படுதலும், இலக்கிய மீள்வாசிப்புக்களும் புதிய நோக்கு நிலைகளில் பல் பரிமாண நிலையில் வளர்ந்து வருவதனையும் நாட்டார் ஆடல் பற்றிய சிந்தனைகளும் விழிப்புணர்வும் ஈழத்தமிழ் சூழலில் தமிழர் ஆடல்கள் பதிவு பற்றிய தேடுகைக்கான ஆய்வுக்களத்தைத் திறந்துவிட இவ் ஆய்வுக்கட்டுரை பயனளிக்கும் en_US
dc.language.iso other en_US
dc.publisher University of Jaffna en_US
dc.subject தமிழ் ஆடற்கலை en_US
dc.subject ஈழத்தமிழ் en_US
dc.subject தமிழ்க்கலை வடிவம் en_US
dc.subject ஈழத்து நாட்டார் ஆடல்கள் en_US
dc.title தமிழர் ஆடற்கலை- ஈழத்து சமூகப் பண்பாட்டு நோக்கு en_US
dc.type Conference paper en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record