Abstract:
மிருகவின வளர்ச்சியின் உயர்மட்டத்தில் மனித இனமும் அம் மனித இனத்தின் உழைப்பின் தொடர்ச்சியில் அவனது
சிந்தனை வளர்ச்சியும், பேச்சும் சீராக்கப்பட்டது. காலப்போக்கில் அவற்றிலிருந்து மனிதக் குழுக்களுக்கான தனித்துவ
மொழிகளும் அக் குழுக்களின் நம்பிக்கைகளிலிருந்து சடங்குகளு அதனோடு தொடர்புடைய கலை வடிவங்களும்
தோன்றின. அக் கலை வடிவங்களுள் தென்னிய தமிழ்ச் சமூகத்துள் நிலவிய பேயாடல் எனும் நடன வடிவமும்
ஒன்றாகும். தாய்வழிச்சமூகத்தில் தோன்றிய தாய்த்தெய்வ வழிபாட்டை அடிப்படையாகவுடைய இப்பேயாடல் நடன
வடிவானது தென்னிந்திய வரலாற்றுக்கால கட்டங்களில் வெவ்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகியிருக்கின்றது.
பேயாடல் என்பது மனிதரால் ஆற்கை செய்யப்படும் ஒரு நடன வடிவின் பெயராக அமையாமல் பேய்களால்
நிகழ்த்தப்படும் ஆடல் ஆற்றுகை பற்றியதாகவே அமைகின்றது. இது மனிதக் குழுக்களின் இறப்பு மீதான
நம்பிக்கைகளின் அடிப்படையிலிருந்து புனையப்படுகின்றது. இப் பேயாடல் சார்பான புனைவுக்கதைகள் காலத்துக்குக்
காலம் மாற்றமடைந்து வந்திருக்கின்றமை கண்கூடு. பேய்கள், பேய்மகள், பேய் பற்றிய நம்பிக்கைகள் மீதான
நேக்குநிலை ஆய்வுகள் பல வெளிவந்த போதிலும் கி.பி 3ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி 9ஆம் நூற்றாண்டு வரையாக
இடம்ற்றுள்ள பேயாடல் மாற்றங்கள் எவையென்பதும் அம்மாற்றங்களில் சமூக உற்பத்தி உறவுக்குள்ள தொடர்பு
என்னவென்பதும் உற்பத்தி உறவு மாற்றங்களினூடு இவ்வாடல் மாற்றங்களை எவ்வாறு நோக்கலாம் என்பதும்
இன்றுவரை பகுத்தாய்வு செய்யப்படாத பகுதியாய் அமைகிறது. இவ்வாறு மேற்குறிப்பிடப்பட்டுள்ள
காலத்திற்குட்பட்டு எழுந்த இலக்கியங்கள் கூறும் பேயாடல் செய்திகள் அவை சார்ந்த சமூக பொருளாதார
பின்புலத்தினோடு நோக்கப்படாமலும் ஆராயப்படாமலும் இருக்கின்றமையினை ஆய்வுப்பிரச்சினையாக கொண்டுள்ள
இவ் ஆய்வு, இக்காலப்பகுதியில் எழுந்த பேயாடல் மாற்றங்களை இனங்கண்டு அவற்றிற்கும் அக்காலச் சமூகத்திற்கும்
இடையிலான தொடர்பினை வெளிப்படுத்தும் நோக்கில் பதிக இலக்கியமான திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகமும்,
காப்பிய இலக்கியமான மணிமேகலையும் கூறும் பேயாடல் செய்திகளைப் பண்புசார் முறை, விபரண பகுப்பாய்வு
முறையுடாக அணுகுகின்றது. இதனூடாக பேயாடல் தொடர்பான நம்பிக்கைகளையும் அதன் மீதான
புனைவுக்கதைகளையும் அவ்வுருவாக்கத்திற்கான சமூகப் பின்புலங்களையும் சமூக அடிக்கட்டுமானத்திலிருந்து சமூக
மேற்கட்டுமானமாக விளங்கிய பேயாடல் பற்றிய கலைக்கருத்துக்களின் மாற்றங்களை அறியும் வகையையும்
கண்டுகொள்ளக்கூடியதாக அமையும் இக்கட்டுரை இனி வரும் காலங்களில் வரலாற்று ரீதியிலான நடனாம்ச
மாற்றங்களை அவற்றின் அடிக்கட்டுமானத்திலிருந்து நோக்கும் விதத்தினை அறிந்துகொள்வதற்கும் இதற்கு முற்பட்ட,
பிற்பட்ட காலங்களின் நாட்டிய மாற்றங்களை அவைசார்ந்த சமூக உற்பத்தி உறவுகளின் மாற்றங்களோடு
ஒப்பீட்டாராய்வு செய்வதற்கும் முன்னோடியாக அமையுமெனலாம்.