dc.description.abstract |
இசை எனப்படுவது ஒவ்வொரு சமூகத்தின் பண்பாட்டிலும் இரண்டறக் கலந்திருப்பது. தான் வழங்குகின்ற பண்பாட்டின் படிமமாக செயற்படுவது இசை. இசையானது பண்பாட்டின் மொழியை, சமயத்தை, பழக்கவழக்கத்தை, வாழ்க்கை முறையினை, வாழ்வியல் கோலங்களை, அரசியலை, பொருளாதாரத்தை எனப் பலவற்றையும் வெளிப்படுத்து நிற்கும் ஆற்றல்வாய்ந்தது.
இந்த நிலையிலே ஈழத்தமிழர்தம் இசை மரபு என்பது மிக காத்திரமான வரலாற்றைக் கொண்டிருந்த போதிலும் துர்ரதிஷ;டவசமாக முறையான பதிவுகள் எதையும் பேணிவைக்கவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக கிடைக்கின்ற செவிகளிலே பதிகின்ற செய்திகளைத் தொகுப்பதன் வழியாகவே ஈழத்து இறைவரலாற்றைப் புரிந்துகொள்ளவேண்டியவர்களாக இருக்கின்றோம். |
en_US |