Abstract:
நாட்டுப்புறக்கலைகள் தாம் தோற்றம் பெறுகின்ற சமூகத்தின் பழக்க வழக்கங்களைப் படம் பிடித்துக்காட்டுவன. இவற்றுள் கிராமியப்பாடல்கள் மிகவும் முக்கியம் பெறுகின்றன. தமிழர் வாழ்வியலானது பாடல்களுடனும் ஆடல்களுடனும் சடங்காசாரங்களுடனும் ஒன்றிக்கலந்தவை. இந்தப் பாடல்களையும் ஆடல் முறைகளையும் சடங்காசார வழக்கங்களையும் அறிந்தும் புரிந்தும் கொள்வதன் மூலம் அந்த சமூகம் பற்றித் தெரிந்து கொள்ள முடிகின்றது. இந்த வகையிலே இலங்கையின் தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழுகின்ற வட புலத்திலே அதாவது யாழ்ப்பாணத்திலே தமிழ்ப்பண்பாட்டுடன் இணைந்து வழக்கிலிருக்கக்கூடிய கும்மிப்பாடல்கள் பற்றியும் அவற்றின் வகைப்பாடுகள் பற்றியும் இந்த ஆய்வுக்கட்டுரை ஆராய முற்படுகின்றது.
இதன் வழி யாழ்ப்பாணச் சமூகத்தையும் அதன் செல்நெறியினையும் தெளிவாகத் தரிசிக்கமுடிகின்றது.