dc.description.abstract |
இசை என்பது மக்கள் வாழ்க்கையோடு ஒன்றி வளர்ந்தது. நால்வகைப்பாகுபாட்டை கூறவந்த தொல்காப்பியம் அவ்வவ் நிலங்களில் வாழும் சமூகங்களில் மக்கள் குழுமங்கள், இயற்கைச் சூழல், வாழ்க்கை முறை, தொழில், உணவு முதலிய அனைத்தையும் கூறுகின்றது. பறை, யாழ் போன்ற இசைக்கருவிகளோடு அக்கால மக்கள் வாழ்க்கையைத் தொடங்கினர் என்பதால் இசையின் முக்கியத்துவமும் இதனூடாகப் புலனாகும்.
சங்க இலக்கியங்களில் இசை பற்றிய செய்திகளும் இசைக்கருவிகள் பற்றிய செய்திகளும் மிகுதியான அளவில் காணப்படுகின்றன. எனினும் பத்துப்பாட்டிலுள்ள ஆற்றுப்படை நூல்களில் இடம் பெறும் இசைக்கருவிகள் பற்றிய செய்திகளை எடுத்துக் கூறுவதாகவே இவ்வாய்வானது அமைகின்றது. |
en_US |