Abstract:
சைவ சமய மரபிலே கலைகளும் சமயமும் மிகவும் இறுக்கமான பிணைப்பினைக் கொண்டிருப்பதை வரலாறுகள் வாயிலாக தெரிந்து கொள்கின்றோம்.காலங்காலமாக நிகழ்ந்து வரும் சமய மறுமலர்ச்சியிலே எல்லாப்படிமுறைகளிலும் சைவமும் கலையும் ஒன்றில் ஒன்று சார்ந்து வளர்ந்திருப்பதைக் கண்டுகொள்ள முடிகின்றது. இந்த வகையிலே சைவத்தின் பொக்கிஷமாகத்திகழ்கின்ற திருமுறைகளிலே கலைகளுள் முதன்மையாக வைத்தெண்ணப்படும் இசை சார்ந்தகுறிப்புக்களை இனங்கண்டு வெளிப்படுத்தும் நோக்கிலே இவ்வாய்வுக்கட்டுரை தொடர்கின்றது.