Abstract:
தமிழ்த்தியாகையர்' என்று இசையுலகத்தினரால் போற்றப்பட்டவர். இவரதுகுடும்பப்பின்னணியும், வாழ்ந்த சூழலும் இவரை மிகச்சிறந்த வாய்ப்பாட்டுக்கலைஞனாகவும் சிறந்த தமிழிசை சார்ந்த வாக்கேயகாரராகவும் இசை வரலாற்றிலே பதிவு செய்ய வழிவகுத்தது. இவரது படைப்புக்கள் சாஸ்த்திரிய இசை மற்றும் தமிழ்த்திரையுலக இசை வரலாற்றிலும் பெரும் பங்கினை வகித்திருந்த போதிலும் இவருடைய பாடல்கள் பெரும்பாலும் இறைபுகழ் பாடுவதாகவே இருந்திருக்கக் காணமுடிகின்றது. இது மட்டுமன்றி பிறவிப்பிணியகற்றி ஆன்ம ஈடேற்றம் வேண்டிபரம் பொருளை நோக்கிப் பாடப்பட்டவையாகவே காணப்படுகின்றது. எவ்வாறு நாயன்மார்கள் இசையால் இறையைப் போற்றி தம்மையும் சமூகத்தையும் நல்வழிப்படுத்தினார்களோ அதற்கொப்பாக சிவனதுபடைப்புக்களையும் நோக்க முடிகின்றது. இந்த வகையிலே தமிழிசை வளர்த்த சிவனாரின் படைப்புக்கள் எத்துணைதூரம் சைவ சமயக்கருத்துக்களையும், சைவ சித்தாந்தக் கருத்துக்களையும் உள்ளடக்கியிருக்கின்றது என்பதனை ஆராய்ந்து சிவனாரது படைப்புக்கள் இசையை மட்டுமல்லாது கூடவே சைவ சமயத்தையும் அதன் தத்துவங்களையும் சமூகத்திற்கு எடுத்துக்கூறுவதிலே பெரும் பங்கு கொண்டிருக்கின்றது என்பதைத் தெளிவுபடுத்தும் வகையிலே இவ்வாய்வு முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது.