Abstract:
கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள பச்சிலைப்பள்ளிப் பிரதேச செயலர் பிரிவில்
நெற்செய்கை முக்கிய பயிர்ச்செய்கையாக மேற்கொள்ளப்படுகின்றது. பச்சிலைப்பள்ளிப்
பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதியின் நெற்செய்கையுடன் தொடர்பான
பிரச்சினைகளை ஆராய்வதாக இவ் ஆய்வு அமைகின்றது. உற்பத்திச் செலவு அதிகரித்த
போதும் ஏக்கருக்கான விளைச்சலின் அளவு குறைவாகவுள்ளமையால் விவசாயிகளால்
எதிர்பார்க்கும் இலாபத்தைப் பெறமுடியாதுள்ளமை முக்கிய பிரச்சினையாக அடையாளப்
படுத்தப்பட்டுள்ளது. நெற்செய்கையின் விளைநிலப்பரப்பு மற்றும் நெல்உற்பத்தி அளவுகள்
என்பவற்றில் காலரீதியாக ஏற்பட்டுள்ள மாற்றங்களை கண்டறிதல், நெற்செய்கையின்
இடம்சார் பரம்பல்களை கண்டறிதல், பிரதேச நெற்செய்கையாளர்களால் எதிர்நோக்கப்படும்
பிரசச் pனைகளை கணட் றிதல,; பிரதேச நெறn; சயi; கயுடன் தொடாபு; படட் பிரசச் pனைகளுகக் hன
தீர்வுகளையும் ஆலோசனைகளையும் முன்வைத்தல் ஆகிய நோக்கங்களை
அடிப்படையாகக்கொண்டு 2010-2019 வரையான காலப்பகுதியை உள்ளடக்கி இவ்வாய்வு
மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ் ஆய்விற்கு முதலாம் நிலைத் தரவுகளான நேரடி அவதானம்,
வினாக்கொத்து, நேர்காணல், மையக்குழுக் கலந்துரையாடல், பங்குபற்றலுடனான கள
அய்வு முறைகளிலும் இரண்டாம் நிலைத்தரவுகளான புள்ளிவிபரங்கள், ஆண்டறிக்கைகள்,
எண்ணிலக்கத் தரவுகளை போன்றனவும் பெற்றுக்கொள்ளப்பட்டன. வினாக்கொத்து
முறையான தரவுசேகரிப்பில் ஒழுங்குமுறையான மாதிரி எடுப்பின் அடிப்படையில்
நெற்செய்கை மேற்கொள்ளப்படுகின்ற 17 கிராமசேவகர் பிரிவுகளிலும் 30மூ ஜப் பிரதி
நிதித்துவப்படுத்தும் வகையில் மாதிரிகள் தெரிவுசெய்யப்பட்டு தரவுகள் கேகரிக்கப்பட்டன.
அவர்களிடம் பெறப்பட்ட தரவுகள் நுஒநட மென்n;பாருளிலும், இடம்சார் பரம்பல்கள் புவியியல்
தகவல் முறைமை நுட்பம் (யுசஉ அயி 10.4) மூலமும் படமாக்கப்பட்டது. விவசாயத்தில்
நெற்செய்கையின் பங்கு, நெற்செய்கையாளர்கள் எதிர்N;நாக்கும் பிரச்சினைகள் போன்றன
விபரணப்புள்ளி;விபர ரீதியான (னநளஉசipவiஎந ளவயவளைவiஉயட) முறை மூலம் பகுப்பாய்வு
செய்யப்பட்டது. ஆய்வின் முடிவாக நெல் விளைநிலப்பரப்பு, உற்பத்தி அளவுகளில் கால
ரீதியாக மாறுதல்கள் காணப்படுவதுடன், நெற்செய்கையின் இடம்சார் பரம்பல் கிராமங்கள்
ரீதியாக வேறுபட்டுள்ளது. ஆய்வுப் பிரதேசத்தில் ஏக்கருக்குரிய நெல் உற்பத்தியானது
சராசரியாக 1000-1500 மப வரை கிடைக்கின்றதுடன் செலவு ஏக்கருக்கு 25000 - 30000 ரூபா
வரை வேறுபடுகின்றது. இப் பிரதேசத்தில் நெல் விளைச்சல் போதாhத நிலையே
காணப்படுவதோடு நெற்செய்கையின் போது விவசாயிகள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்
நோக்குகின்றமை கண்டறியப்பட்டதுடன் நெற்செய்கை உற்பத்தியை அதிகரிப்பதற்கான
பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.