Abstract:
இசை அனைத்துத் தரப்பு மக்களின் வகிக்கின்றது. இவ் இசை அனைத்து வாழ்க்கையிலும் ஒரு முக்கிய பங்கு விழாக்களிலும், இறைவழிபாட்டிலும், விளையாட்டு மற்றும் அரசியல் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளிலும் தவிர்க்கமுடியாத ஒரு முக்கிய பங்கினை வகிக்கின்றது. பெரும்பாலான மக்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தை இசையை இரசிப்பதற்கு தினம்தோறும் செலவிடுகின்றனர். ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கைப் படிகளிலும் இசை இணைந்தள்ளது. ஒரு குழந்தை பிறந்தவுடன் தாலாட்டில் ஆரம்பிக்கும் இசை, அவன் இறந்தபின் ஒப்பாரிப் பாடலின் இசையில் முடியும்வரை ஒவ்வொரு பருவத்திலும் மனிதனை ஆட்கொள்கின்றது. இதற்கு முஸ்லிம் சமூகமும் விதிவிலக்கானதல்ல. மேற்றியவற்றுள் தாலாட்டுப் பாடல்கள் கிராமத்து முஸ்லிம்களிடையே எவ்வாறு வளர்ந்துள்ளது என்பதை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.