Abstract:
சமயம் என்பது இயற்கையான ஒன்றல்ல, அது மனிதனால் உருவாக்கப்பட்டது. சமயத்தின் பிரதான இயங்குநிலை விசையாக அமைவது ஐதீகம், சடங்கு, நம்பிக்கை. இம்மூன்றும் மக்களைக் குறிப்பிட்ட சமயம் சார்ந்த அடையாளத்திற்குள் உள்ளடக்குகின்றன. இந்நிலையில் யாழ்ப்பாணத்து நல்லூர் கோவிலில்இடம் பெறும்சூரன்போர்திருவிழாவில்நவவீராக் ளின்சடஙக்pயலச்hர்பஙகு;பறற்ல் என்பது முதன்மையான ஒன்றாகும். நவவீரர்கள் பற்றிய புராணக் குறிப்புக்களின் தொடர்ச்சி யாழ்ப்பாணத்தின் முதன்மையான சாதிய சமூகங்களில் ஒன்றான செங்குந்தர் சமூகத்தினரால் உள்வாங்கப்பட்டு இன்றுவரை அவர்கள் நல்லூர் கோவில் சூரன்போரில் நவவீரர்களாக வேடமிட்டு பங்குபற்றி வருகின்றமை தொடர்பாக இவ்வாய்வு பகுப்பாய்வு செய்கின்றது. இச்சடங்கியல் நடைமுறையினைச் செங்குந்தர் சமூகத்தின் இன வரலாறு, சாதிய சமூக அடையாளம், அவற்றுடன் இணைந்த சமூகநிலை போன்றவற்றின் அடிப்படையில் மானிடவியல் நோக்கில் இந்த ஆய்வு பகுப்பாய்வு செய்கின்றது. யாழ்ப்பாணம் கல்வியங்காட்டுப் பகுதியில் செறிந்துவாழுகின்ற செங்குந்தர் சமூகத்தினரிடம் 2019 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட களஆய்வும், நல்லூர் கோவில் சூரன் போர் திருவிழாவில் 2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பங்குபற்றும் அவதானங்களும் இவ்வாய்வுக்கான முதல்நிலைத் தரவுகளுக்கான அடிப்படையாகின்றன. மேலும் செங்குந்தர் சமூகம் தொடர்பாக வெளிவந்த நூல்கள், ஆய்வுக் கட்டுரைகள் இங்கு கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன. களஆய்வின்போது பிரதான தகவலாளிகளுடனான கலந்துரையாடல், நேர்காணல்கள் ஆகியவற்றின் வழியாகச் சேகரிக்கப்பட்ட தரவுகளின் பகுப்பாய்வின் வழியாக யாழ்ப்பாணப் பண்பாட்டு அடையாளமாகத் திகழும் நல்லூர் கோவிலுடனான செங்குந்தர் சமூகத்தின் தொடர்பு என்பது முருகனின் போர்வீரர்களான நவவீரர்களுடைய ஐதீகத்துடன் நெருங்கிய தொடர்பினைப்பேணி, அதன்வழியாக அதனை ஆண்டுதோறும் இடம்பெறும் சடங்கில் நடைமுறைப்படுத்தி வருகின்றமையானது வெளிக்கொணரப்பட்டுள்ளது. மேலும் இவ்வகையான சடங்கியல் தொடர்பு என்பது செங்குந்தர் சமூகத்தின் சமூக இருப்பு, தொடர்ச்சி நிலை, சமூக தகுதிநிலையாக்கம் ஆகிய விடயங்களில் முதன்மையான இடத்தினைப் பெறுகின்றமையினை இவ்வாய்வு முதன்மைப்படுத்தி வெளிக்கொண்டுவந்துள்ளது. சமய வழிபாட்டுடன் இணைந்த சாதிய சமூக அசைவியக்கம் சடங்கியல் நம்பிக்கையுடன் இடையறாத தொடர்பினைப் பேணிவருவதினை இந்தஆய்வுவலியுறுத்தியுள்ளமைகவனத்திற்கொள்ளத்தக்கது.