Abstract:
மக்கள் நல்லொழுக்க நெறியில் நின்று நன்மை அடைதல் வேண்டும். இதற்குக் கடவுளின் துணைஇன்றியமையாதது.எவ்வுயிர்க்கும்துணையாய்கடவுளைவணங்கிநலமடையவேமதங்கள் ஏற்பட்டன. இவ்வகையாய் கூறுமிடத்து மதங்கள் பலவானதேன் என்ற வினா நம்மிடையே எழலாம். அதாவதுமெய்யறிவுபெற்றோர்தத்தமதுநாட்டின்கல்வி,அறிவு,ஒழுக்கம்,விருப்பங்களுக்கேற்றபடி மதங்களை ஏற்படுத்தினர். அந்தவகையில் உலகில் தோன்றிய புராதன மதங்களில் இன்றும் வாழ்ந்துகொனண்டிருக்கும் ஒரே ஒரு மதம் இந்து மதம் எனலாம். வேற்று மதங்கள் சிலவற்றின் நடவடிக்கைகளால் இந்து மதத்திற்குக் கால ஓட்டத்தில் பாதிப்புக்கள் ஏற்படுவதுண்டு. இவ்வாறாக சமகாலத்தில் இந்து மதத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மதம் மாறுகின்ற இந்துக்களின் எண் ணிக்கை அதிகரித்துள்ளது. காலனித்துவம் எனப்படும் குடியேற்ற ஆட்சிமுறை மறைந்துவிட்டாலும் அவர்கள் விட்டுச் சென்ற எச்சங்களே இவ்வாறான மதமாறும் மற்றும் மதமாற்றும் செயற்பாட்டில் செல்வாககு; ச் செலுதது; கினற் ன. அநத் வகையில் காலனிதது; வ காலபப் குதி முதல் சமகாலம் வரையான மதமாற்றத்திற்கான காரணிகளை வெளிக்கொணர்ந்து அதனால் இந்துக்கள் எதிர்நோக்கும் சவால்களை அடையாளப்படுத்துவதை நோக்கமாகக்கொண்டு இவ்வாய்வானது மேற்கொள்ளப் படுகிறது. இவ்வாய்வு விபரண ஆய்வு முறை, வரலாற்று ஆய்வு முறை எனும் ஆய்வு முறையியல் களுக்கமைய கட்டமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் இவ்வாய்வில் கள ஆய்வு முறையும் பயன்படுத்தப் பட்டுள்ளது. சமகாலத்தில் அதிகளவிலான மதமாற்றச் செயற்பாடுகள் நடைபெறுகின்றன என்பதும் அதற்கான பல உத்திகள் மதமாற்றிகளால் கையாளப்பட்டு வருகின்றன என்பதும் மதமாற்றத்தினால் இந்து சமூகத்தினர் பல சவால்களைச் சந்திக்கின்றனர் என்பதும் இதைத் தடுப்பதற்காகப் பல வழி முறைகளைக் கையாள வேண்டும் என்பதும் இவ்வாய்வின் மூலம் வெளிக்கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்வழிசமூகப்பணிகளைச்செய்தல்,விழிப்புணர்வுஏற்படுத்தல்,மூடநம்பிக்கைகளைக்களைதல், வழிபாடுகளைத் தமிழில் இயற்றுதல், சாதிப்பாகுப்பாட்டைக் களைதல், இந்துத் தொண்டர் நிறுவனங்களை உருவாக்குதல், இந்துமத நூல்களை கற்கத்தூண்டுதல், அறக்கல்வி போதிக்கும் ஆசிரியர்களை ஊக்குவித்தல், இந்து சஞ்சிகைகளை வெளியிடல், ஆன்மீக விசுவாசமும் சமய ஞானமும் நாட்டமும் உள்ளவர்களை சமயப் பிரசாரகர்களாக நியமித்தல், இந்துமத நூல்களில் உள்ள சிக்கல் தன்மையை நீக்குதல் என்பவற்றை இந்த ஆய்வு பரிந்துரைகளாக முன்வைக்கின்றது. இவ்வாய்வானது மதமாற்றம் பற்றி ஆராய முயல்பவர்களுக்கும் இந்து என்ற முறையில் மத மாற்றத்தைத்தடுத்துநிறுத்தமுயல்பவர்களுக்கும்பயனுடையதாய்அமையும்.