DSpace Repository

சைவ வைணவப் பின்புலத்தில் பாதவழிபாடு

Show simple item record

dc.contributor.author Kishanthini, T.
dc.date.accessioned 2024-04-16T04:55:16Z
dc.date.available 2024-04-16T04:55:16Z
dc.date.issued 2023
dc.identifier.uri http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/10373
dc.description.abstract ஆன்மிக உலகில் மறைபொருளாக இருக்கும் பல விடயங்களில் திருவடி எனப்படும் 'ஸ்ரீபாத' வழிபாடும் ஒன்றாகும். இறைவனை விடவும் அவனது நாமமும் திருவடியும் மகிமை பெற்றவை. இறைவன், இறைவி, தாய், தந்தை, குரு ஆகியோரது திருவடிகளைப் பாதுகைகள் என வழிபடுவது ஒருவகை ஞானமரபாகவும்இருந்துவருகின்றது.அந்தவகையில்இலங்கையில்நான்கு சமயத்தவர் களாலும் பினபற்றப் டுகினற் ஒரு வழிபாடடு; மரபாக பாதவழிபாடு மேற்கொள்ளப்பட்டு; வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இலங்கையில் சிவனொளிபாதமலை சிறப்புப்பெற்ற தலமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இத்தலத்தில்அமையப்பெற்றுள்ள பாதச்சுவடு, தத்தம் பரம் பொருளினுடையது என்பதாகவே அனைத்து சமயத்தவரும் வாதிடும் நிலையில், அதுதொடர்பான தெளிவினை ஏற்படுத்தலென்பது அவசியமாகக் கருதப்படுகிறது. அந்தவகையில் சிவனொளிபாத மலை என அழைக்கப்படும் மரபைக்கொண்டு, இங்கு உறையும் தெய்வம் சிவன் எனவும் இங்கு காணப்படும் பாதம் சிவனுடையது என்றும் போற்றப்படுகிறது. சிவன் ஒளி பாதம் என்ற மூன்றையும் ஒரே இடத்தில் தரிசிக்கக்கூடிய இடமே சிவனொளிபாதமலை. இங்கு சிவவழிபாடும் ஒளிவழிபாடும் பாதவழிபாடும் ஒருங்கே அமைந்திருப்பது சிறப்பம்சமாகும். இந்துக்கள் முதலில் சிவலிங்கத்தை உருவகப்படுத்தும் மலையை வணங்கி, பின் மலை உச்சியை அடைந்து சூரியனை வழிபடுவர். இது பண்டைக் காலத்திலிருந்து சிறப்புற்றுத் திகழும் சிவசூரிய வழிபாடாகும். இந்நிலையில் இம் மலையுச்சியில் காணப்படும் பாதம் சிவனுடைய திருவடியாகப் பார்க்கும் மரபு சைவத்தின் தொன்மையையும் சிறப்பையும் வெளிப்படுத்தி நிற்கின்றது. மேலும் இந்துசமயத்தில் பாத வழிபாட்டை முதன்முதலில் அனுசரித்தவர்கள் வைணவர்கள் என்பதும் இந்து வைதிக மரபில் வைணவத்தொன்மங்களுள்பாதவழிபாட்டிற்குமுன்னுரிமைகொடுக்கப்படுவதும்கவனிக்கத்தக்கது. இலங்கையில் இராமாயண வரலாற்றுக் காலத்திலிருந்தே விஷ்ணு வழிபாடு சிறப்புடன் இருந்து வந்துள்ளது இலங்கையில் இன்றைக்கும் சிவனொளிபாத மலையை அண்மித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் விபீஷ்ண வழிபாட்டில் 'ஸ்ரீபாதம்' முதன்மைப்படுத்தப்படுவதும் இராமர் வழிபாட்டுடன் தொடர்புடைய ஆஞ்சநேயர் சிறிய திருவடி என அழைக்கப்படுவதும் இலங்கையில் வைணவத்தில் பாதவழிபாட்டை வலியுறுத்துவதாக அமையும். இந்நிலையில், ஸ்ரீபாதமலையில் வழிபடப்படும் பாதத்தினை விஷ்ணுவின் தொன்மத்துடனும் தொடர்புறும் வகையில் அணுக வாய்ப்பாகின்றது. இலங்கை சிவனொளிபாதமலையில் அமையப்பெற்று வழிபடப்பெற்றுவரும் 'பாதம்' வரலாற்றினடிப்படையில் இந்துத்தெய்வங்களில் ஒன்றினது சுவடு என்பதும் அது சைவ வைணவப் பின்புலத்துடன் தொடர்புடைய தொன்மங்களில் ஒன்றாகக் காணப்படுகின்றது என்பதையும் வெளிக்கொணர்வது இந்த ஆய்வின் நோக்கங்களாக உள்ளன. இந்த ஆய்வானது வரலாற்றியல்; மற்றும் விபரண ஆய்வு முறை யியல்களுக்கமைவாக கட்டமைக்கப்படுவதோடு, பொருதத் மானசந்தர்ப்பங்களில்தரவுகள்உள்ளடக்கப்பகுப்பாய்வுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளன. en_US
dc.language.iso other en_US
dc.publisher University of Jaffna en_US
dc.subject பாதவழிபாடு en_US
dc.subject சிவனொளிபாதமலை en_US
dc.subject சைவம் en_US
dc.subject வைணவம் en_US
dc.subject இலங்கை en_US
dc.title சைவ வைணவப் பின்புலத்தில் பாதவழிபாடு en_US
dc.type Conference paper en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record