dc.description.abstract |
இந்த ஆய்வானது ஆரம்பப் பாடசாலைகளில் காலைப்பிரார்த்தனையும் இந்துப்பண்பாடும் எனும் தலைப்பை மையமாகக் கொண்டு வேலணை தீவக வலய ஆரம்பப் பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆரம்பப் பாடசாலைகளில் காலைப்பிரார்த்தனையினதும் இந்துப் பண்பாட்டினதும் தொடர்பை அறிதல், ஆரம்பப் பாடசாலை மாணவர்கள் காலைப் பிரார்த்தனையில் கொண்டுள்ள ஈடுபாட்டை அறிதல், காலைப்பிரார்த்தனையின்போது இந்துப் பண்பாட்டின் தொடர்பை அறிதல் முதலானவற்றை நோக்கங்களாகக் கொண்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அளவு சார் மற்றும் பண்புசார் முறையை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாய் வானது நேர்காணல் மற்றும் இரண்டாம்நிலைத் தரவுகளான நூல்களை அடிப்படையாகக் கொண் டது. மாதிரிகளாகத் தெரிவுசெய்யப்பட்ட 15 ஆரம்பக்கல்விப் பாடசாலை ஆசிரியர்களிடமிருந்து பெற்றுக்கொண்டதகவல்களின்அடிப்படையில்தரவுப்பகுப்பாய்வுமேற்கொள்ளப்பட்டது.இத்தரவுப் பகுப்பாய்வானது MS Excel 2013 இல் மேற்கொள்ளப்பட்டது. ஆய்வு முடிவாக ஆரம்பப் பாடசாலைகளில் பெரும்பான்மையாக இந்துப்பண்பாடு கடைப்பிடிக்கப்படுகின்றது. ஆரம்பப் பாடசாலைகளிலேயே இந்துப் பண்பாட்டை மாணவர்களுக்குக் கற்றுக்கொடுத்தல் முக்கியமான ஒன்றாகும். இதன்மூலம் மாணவர்கள் எதிர்காலத்தில் சிறந்த ஒழுக்க சீலர்களாக மிளிர முடியும். இந்து மாணவர்களுக்குச் சிறுவயதிலேயே இந்துப்பண்பாடு தொடர்பான விடயங்களைக் கற்றுக்கொடுத்தல்இன்றியமையாதது,ஆகையால்ஆசிரியர்கள்சிறுபிள்ளைகளுக்குஏற்றவண்ணம் இந்துப்பண்பாடு தொடர்பான விடயங்களைக் கற்பிக்க வேண்டும். இதன்மூலம் ஆரம்பப் பாடசாலைகளிலேயே மாணவர்களுக்கு இந்துப்பண்பாடு தொடர்பான அறிவினை ஏற்படுத்த முடியும்.இவற்றைஇந்தஆய்வுதனதுபரிந்துரைகளாகமுன்மொழிந்துள்ளது. |
en_US |