Abstract:
யாழ்ப்பாண மாவட்டமானது இலங்கையில் தமிழ்ச்சைவ மக்கள் நீண்ட காலமாக அதிகளவில் வாழும் பிரதேசமாக அறியப்படுகின்றது. இலங்கையில் பண்டைய காலம் தொட்டு இன்று வரை இந்துத் திருக்கோயில்கள் சார்ந்த விடயங்களை உருவாக்குவதிலும் பேணிப்பாது காப்பதிலும் மரபு வழி மீறாது மாற்றங்களைச் செய்வதிலும் புத்தாக்க முயற்சிகளை உருவாக்குவ திலும் யாழ்ப்பாண மக்கள் அல்லது ஏனைய பிரதேசங்களில் வசிக்கும் யாழ்ப்பாணத்தவர்களே இலங்கைமுழுவதும்பண்டையகாலம்தொட்டுஇன்றுவரைமுன்னிலைவகிக்கின்றனர்.ஆலயங்கள் சாதாரணமாகத்தொழிற்படுவதற்குப்போதுமானதுஎனஏற்றுக்கொள்ளப்பட்டவிடயங்கள்,மரபுகள் விதிமுறைகள் ஆகியவற்றினைப் பின்பற்றுவதுடன் மேலதிகமாகப் புதிய விடயங்கள், செயற்பாடுகளை நிரந்தரமாகவோ தற்காலிகமாகவோ இணைத்துக்கொள்வதனூடாகப் புத்தாக்கங் கள் தோற்றம் பெறுகின்றன. இலங்கையில் சுதந்திரத்திற்குப் பின்னரான காலப்பகுதியில் தொடர்ச்சி யானதும் நிலைபேறானதுமான வளர்ச்சியினைச் சைவத்திருக்கோவில் தொழிற்பாடுகள் பெற்றிருந் தன. தமிழ் நாட்டுடனான உறவு, தகவல் பரிமாற்றங்களால் ஆகம அறிவு விருத்தி, புலம் பெயர்வுகளால் ஏற்பட்ட பொருளாதார முன்னேற்றம், அனைத்து மத செயற்பாடுகளுக்கும் கிடைத்த சுதந்திரம், தொழில்நுட்;ப முன்னேற்றம், போக்குவரத்து வசதி விருத்தி போன்ற காரணங்களால் ஏற்பட்ட முன்னேற்றமானது 20 ஆம் நூற்றாண்டின் பிற்பட்ட காலப்பகுதியில் (கிட்டத்தட்ட 1975 ஆம் ஆண்டிற்குப் பின்னதாக) இருந்து இன்;று வரையான அரை நூற்றாண்டு காலப்பகுதியில் முழுமை யாகக் கட்டமைக்கப்பட்ட ஆலயங்களின் கட்டடக்கலை மற்றும் கிரியை முறைகளில் பல்வேறு புத்தாக்க சிந்தனைகள் மற்றும் முயற்சிகளை வெளிப்படுத்தியுள்ளது. இவற்றில் யாழ்ப்பாண மாவட்டத்தில் பல்வேறு பிரதேசங்களிலும் பல்வேறுபட்ட தெய்வங்களுக்குக் கட்டடக்கலை அல்லது அமைப்பு ரீதியாக சப்ததள மற்றும் நவதள இராஜகோபுரங்கள் கட்டப்பட்ட ஆலயங்களும் கிரியை நெறி ரீதியாக 33 குண்ட மற்றும் 49 குண்ட கும்பாபிசேகங்களை மேற்கொண்ட ஆலயங்களும் ஏனைய புத்தாக்கத் தொழிற்பாடுகளுமாக நூற்றுக்கணக்கான ஆலயங்களில் ஏற்பட்ட புத்தாக்க நடவடிக்கைகள்யாழ்ப்பாணத்தின்பல்வேறுபிரதேசத்தவரும்தத்தமதுபிரதேசங்களில்தமதுதெய்வ வழிபாட்டில் மேற்கொண்ட புத்தாக்க முயற்சிகளை வெளிப்படுத்த மேற்கொண்ட முயற்சிகளுக்குச் சான்றாக அமைகின்றன. அத்துடன் ஏனைய பிரதேசங்களுக்கு வழிகாட்டியாகவும் அமைகின்றது. ஆகவே இவ்விடயங்களைப்; புள்ளிவிபர ரீதியாக பல்வேறுபட்ட வழிமுறைகளினூடாக ஆய்வு செய்வதனால் அவற்றின் பிரதான இயல்புகளையும் விடயங்களையும் வெளிக்கொணர இவ்வாய்வு முனைகின்றது.