DSpace Repository

வேறுபட்ட நெறியாள்கை அணுகுமுறைகளும் நெறியாள்கை நோக்கு நிலையும் : யாழ்ப்பாண அரங்க ஆற்றுகைகளினை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு

Show simple item record

dc.contributor.author Geethanjana, J.
dc.contributor.author Radhitharan, K.
dc.date.accessioned 2024-04-01T08:05:35Z
dc.date.available 2024-04-01T08:05:35Z
dc.date.issued 2024
dc.identifier.uri http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/10352
dc.description.abstract ஈழத்துத் தமிழ் நாடக அரங்கில் எழுந்துள்ள நாடகங்களின் நெறியாள்கை முறைமையில் காலவோட்டத்தில் நெறியாளர்களினால் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆய்வானது ஈழத்து தமிழ் நாடக அரங்;கில் சமகால அரங்கப் படைப்புகளில் நெறியாள்கை முறைமையின் போதாமையைப் பிரச்சனையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. சமகால நாடக நெறியாள்கை முறைகள் எவை? நெறியாள்கையில் எவ்வாறான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன? ஏன் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன? என்ற ஆய்வு வினாக்களுக்கான பதில்களை தேடுவதாக ஆய்வானது அமையப் பெற்றுள்ளது. மேலும் வேறுபட்ட நெறியாள்கை முறையினை ஆராய்ந்து அதற்கான காரணங்களைக் கண்டறிவதன் மூலம் அரங்க ஆற்றுகைகள் எழுந்த ஒவ்வொரு காலப்பகதியிலும் நிகழ்ந்துள்ள ஆற்றகையினை இனங்கண்டு அவற்றின் நெறியாள்கை முறைகளினை அறிவதுடன் சமகாலத்தில் அரங்கு எவ்வாறு இயங்குகின்றது என்பதனையும் ஆராய்வதாக இது அமைந்துள்ளது. இது பண்புசார் அணுகுமுறையில் நோக்கப்பட்டு நேர்காணல் மற்றும் ஆற்றுகைகளை அவதானிப்பு என்பதன் மூலம் தரவுகளைத் திரட்டி ஆய்வு செய்யப்பட்டள்ளது. ஈழத்து தமிழ் அரங்க ஆற்றுகைகளின் நெறியாழ்கையினை ஆராயடகின்ற போது பாரம்பரிய அரங்கில் நாடகமானது இலக்கியமாக எழுதப்பட்ட நிலையில் கொண்டு வரப்படுகின்றது. அவ்விலக்கியமானது எழுத்துருவாக்கப்பட்டு நாடகமாக மேடையேற தொடங்கியதிலிருந்து எழுத்துருக்களினை அடிப்படையாகக் கொண்டு நெறியாள்கை முறைமையே ஈழத்து தமிழ் நாடக அரங்கில் காணப்பட்டது. அம்முறையானது காலவோட்டத்தில் மாற்றமடைந்து வருவதினை அவதானிக்க முடிகின்றது. நாடகத்திற்கான எழுத்துருக்கள் உருவாக்கப்படுகின்ற முறையிலே எழுத்து நீக்கப்பட்ட நெறியாள்கையானது சமகால நெறியாளர்களினால் அதிகம் மேற்கொள்ளப்படுகின்றது. அது சார்ந்த தகவல்களும் காரணங்களும் ஆய்வினூடாக கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே ஆய்வினூடாக பெறப்பட்ட பெறுபேறாக வேறுபட்ட நெறியாள்கை முறைகளினை ஆராய்ந்ததன் மூலம் காலப்பின்னணி நெறியாள்கை முறையில் ஏற்படுகின்ற மாற்றத்திற்கான முக்கியமான ஒரு காரணியாக அமையப்பெற்றுள்ளமையினையும் காலத்தின் தேவையும் பார்வையாளர்களுக்கு அவசியமானது எது என்பது நோக்கிய நெறியாளர்களது நாடக நெறியாள்கை முறைமைகள் நகர்ந்துள்ளன என்பதனையும் கண்டறிய முடிகின்றது. இதனை அடித்தளமாகக் கொண்டு எதிர்காலத்தில் நாடகங்களை அடுத்த கட்ட நிலைக்கு கொண்டு செல்வதற்கு இவ்வாய்வானது துணைபுரிவதுடன், அரங்க ஆற்றுகைகளை நெறிப்படுத்தும் நெறியாளர்களுக்கும் நாடக கலைஞர்களுக்கும் ஈழத்து அரங்க வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள மாற்றங்களினை இனங்காட்டுவதாக இவ்வாய்வு அமையப் பெற்றுள்ளது.
dc.language.iso other en_US
dc.publisher University of Jaffna en_US
dc.subject அரங்கு
dc.subject அளிக்கை முறை
dc.subject செயல்முனைப்பு
dc.subject படைப்பாக்கம்
dc.subject தீராத்தேடல்
dc.title வேறுபட்ட நெறியாள்கை அணுகுமுறைகளும் நெறியாள்கை நோக்கு நிலையும் : யாழ்ப்பாண அரங்க ஆற்றுகைகளினை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு en_US
dc.type Conference paper en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record