DSpace Repository

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களிடையே பொதுப் பேச்சு பதகளிப்பு

Show simple item record

dc.contributor.author Nimalda, S.
dc.contributor.author Abiramie, I.
dc.date.accessioned 2024-04-01T07:41:20Z
dc.date.available 2024-04-01T07:41:20Z
dc.date.issued 2024
dc.identifier.uri http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/10347
dc.description.abstract பொதுப்பேச்சு பதகளிப்பு என்பது ஓர் உளவியல் பிரச்சினையாகக் காணப்படுகின்றது. பல்கலைக்கழக மாணவர்களுக்கு கற்றல் மட்டுமல்ல பொதுவில் பேசுகின்ற திறனும் முக்கியமாகக் காணப்படுகின்றது. இவை கற்கின்ற காலப்பகுதியிலேயே வளர்க்கப்படவேண்டியதொன்றாகும். ஆனால் பல மாணவர்கள் கற்றலில் சிறந்து விளங்கினாலும், பொதுப்பேச்சுக்கென்று வரும் போது பதகளிப்பு அடைபவர்களாகக் காணப்படுகின்றனர். இதற்குத் தடையாக மாணவர்களிடம் காணப்படுகின்ற ஓர் உளவியல் பிரச்சினையாக பதளிப்பானது காணப்படுகின்றது. அந்தவகையில் மாணவர்கள் பொதுவில் பேசுகின்ற போது (Presentation speech) பயம், பதற்றம் அடைகின்றனர். எனவே மாணவர்கள் மத்தியில் காணப்படுகின்ற பொதுப்பேச்சு பதகளிப்பானது இவ்வாய்வில் சிறப்பாக ஆராயப்பட்டுள்ளது. இவ்வாய்விற்கென யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைப்பிரிவுக்குட்பட்ட நான்காம் வருட மாணவர்கள் எளிய எழுமாற்று மாதிரி நுட்பதட்தைப் பயன்படுத்தி 200 பேர் மாதிரிகளாகத் தெரிவு செய்யப்பட்டனர். இவர்களில் பெண் மாணவர்களில் 114(57%) மாதிரிகளும், ஆண் மாணவர்களில் 86 (43%) மாதிரிகளும் தெரிவு செய்யப்பட்டு ஆய்விற்கு உட்படுத்தப்பட்டனர். இவ்வாய்விற்கான தரவுகள் ஆய்வாளனால் விருத்தி செய்யப்பட்ட தனிப்பட்ட விபரங்களைக் கொண்;ட பகுதி I உடன், பகுதி II இல் McCroskey (1970) இனால் விருத்தி செய்யப்பட்ட Personal report of public speaking Anxiety (PRPSA)வினாக் கொத்து மாணவர்களிடம் வழங்கப்பட்டு தரவுகள் பெறப்பட்டன. இவ்வாய்விற்கு .Test, Regression Analysis, Correlation, ANOVA போன்ற பகுப்பாய்வு கருவிகள் பயன்படுத்தப்பட்டு, புள்ளிவிபரவியல் மென்பொதி 21வது பதிப்பில் Statistical Package For the Social Science IBM SPSS 21 பகுப்பாய்வு செய்யப்பட்டது. இதன் முடிவின் படி பொதுப்பேச்சுப் பதகளிப்பில் 5% ஆனவர்கள் அதிகளவிலான பதகளிப்பையும், மிதமான பொதுப்பேச்சுப் பதகளிப்பு 54% ஆகவும், குறைவான பொதுப்பேச்சுப் பதகளிப்பு 40% ஆகவும் காணப்படுகின்றது என்பது ஆய்வின் முடிவிலிருந்து கண்டறியப்பட்டுள்ளது. பொதுப்பேச்சுப் பதகளிப்பில் தாக்கம் செலுத்தும் காரணியில் அதிகளவு விரிவுரையாளர்களின் விமர்சனம் பற்றிய பயம் சக மாணவர்களின் விமர்சனம் பற்றிய பயம், வெட்கம் மற்றவர்கள் மதிப்பிட்டுக் கொள்வார்கள் என்ற பயம் போன்றன அதிகளவில் தாக்கம் செலுத்துவது கண்டறியப்பட்டது. மாணவர்களிடம் காணப்படும் பொதுப்பேச்சு பதகளிப்பானது மதிப்பிடப்பட்டு அதற்கான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் அதனால் மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் கண்டறியப்பட்டு இவை மாணவர்களின் கற்றல் சார் அடைவுகளிலும், எதிர்கால தொழிலைப் பெற்றுக் கொள்வதில் ஏற்படுத்தும் தாக்கம் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டு, அவற்றிற்கான முடிவுரைகளும் பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.
dc.language.iso other en_US
dc.publisher University of Jaffna en_US
dc.subject பயம்
dc.subject பதற்றம்
dc.subject பதகளிப்பு
dc.subject பொதுப்பேச்சு பதகளிப்பு
dc.subject விமர்சனம்
dc.title யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களிடையே பொதுப் பேச்சு பதகளிப்பு en_US
dc.type Conference paper en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record