dc.description.abstract |
தமிழர் வாழ்வு சைவத்தையும், தமிழையும், இசையையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இச் சிறப்புவாய்ந்த சைவம் வேற்று சமயத்தின் ஆதிக்கத்தில் சிக்கியிருந்த சமயநெறிக் காலம் எனப்படும். பல்லவர் காலகட்டத்தில் மறுமலர்ச்சியடைய வேண்டிய தேவை ஏற்படுகிறது. பல்லவர் காலம் பக்தியை அடிப்படையாகக் கொண்டது. இக்காலத்தில் எழுந்த தேவாரங்கள் சைவத்தின் சமூக, சமய, தத்துவ, இசைசார்ந்த வளர்ச்சிக்கும், மக்களையும், மன்னர்களையும் சைவத்தின்பால் ஈர்த்து மீட்டுருவாக்கம் செய்வதற்கும் வித்திட்டன. தேவார முதலிகளான சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஒவ்வொரு ஊராகச் சென்று தலங்கள் தோறும் மொழி உணர்வையும், சமய உணர்வையும், பிரதேச உணர்வையும் தூண்டி இவற்றினூடாக சைவசித்தாந்த உண்மைகளையும், அதன் மேன்மைகளையும் தங்கள் பாடல்கள் மூலம் புலப்படுத்தினார்கள். இப்பாடல்களும், கருத்துக்களும் பாமர மக்கள் வரை சென்றடைவதற்கும், மக்களைக் கவர்வதற்கும் சைவநாயன்மார்கள் இப்பாடல்களைப் பண்கூட்டிப் பாடினார்கள். அவர்கள் ஒவ்வொரு தலத்திற்கும் சென்று பதிகம் பாடும்போது அற்புதங்களும் நிகழ்ந்த காரணத்தால், இப்பாடல்களும், கருத்துக்களும் செவிநுகர் கனிகளாக மக்களைச் சென்றடைந்தன. இத் தேவாரமுதலிகளின் பாடல்கள் அடங்கிய திருமுறைகளில் காணப்படும் சைவசித்தாந்த மேன்மைகள் அவர்கள் செய்த அளப்பரிய அற்புதங்களின் அடிப்படையிலும், பண் வகைகளின் அடிப்படையிலும் இவ் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இவ் ஆய்வில் பகுப்பாய்வு முறையும் ஒப்பீட்டு முறையும் பின்பற்றப்பட்டுள்ளது. |
en_US |