dc.description.abstract |
ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றின் சிறப்பையும் தனித்துவத்தையும் வெளிக்கொணர உழைத்த ஆய்வாளர்கள் பலர். அவர்களுள் பத்தொன்பதாம் நூற்றாண்டு ஈழத்துத் தழிழ் இலக்கிய வரலாற்றின் முக்கியத்துவத்தினை தனது ஆய்வுகளின் மூலம் வெளிப்படுத்தியவர் பேராயர் எஸ். ஜெபநேசன். ஈழத்துத் தழிழ் இலக்கிய வரலாற்றில் பத்தொன்பதாம் நூற்றாண்டு குறிப்பிடத்தக்கதொரு காலகட்டமாகும். அது சமூக, அரசியல், பொருளாதாரம், சமயம், இலக்கியம், எனப் பல்வேறு தளங்களிலும் மாற்றமுற்றுத் தனித்துவம் பெற்றிருந்தது. குறிப்பாக அமெரிக்க மிஷனினுடைய தமிழியல் வளர்ச்சி சார்ந்த பணிகளைத் தொகுத்துக்காட்டல், ஆவணப்படுத்தல் ஊடாகப் பெரும்பணி புரிந்தவராக பேராயர் விளங்குகின்றார். இவர் முன்மாதிரிகையான ஆய்வுகளைப் பல தளங்களிலும் செய்துள்ளார். சமயம், கமூகம், தமிழ்மொழி என மூன்று தளங்களிலும் அவரது பணிகள் விரிந்துள்ளன. ஈழத்தது இலக்கிய வரலாற்றிற்கு வலுச்சேர்க்கும் வகையில் பேராயர் எஸ். ஜெபநேசன் ஆற்றிய தமிழ்ப் பணிகள் பற்றியதாக இந்த ஆய்வு அமைகிறது. பல தளங்களிலும் அவர் ஆற்றிய தமிழ்ப் பணியையும் படைப்பிலக்கியங்களையும் ஆதாரமாகக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் புலமை பெற்ற பேரர்யர் கலாநிதி. எஸ். ஜெபநேசனின் ஆய்வு நூல்களையும், மொழிபெயர்ப்பு சார்ந்த படைப்புக்களையும் கட்டுரை முதலான ஏனையவற்றையும் ஆய்வுக்குட்படுத்தி ஈழத்து இலக்கிய ஆய்வு வரலாற்றில் அவருக்குரிய தனித்துவம் எத்தகைளது என்பதை இனங்கண்டு வெளிக்கொணர்வது இந்த ஆய்வின் நோக்கமாகும். இந்த ஆய்வு விபரண ஆய்வு முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பேராயர் பற்றி தொகு;கப்பட்ட தரவுகளையும் தகவல்களையும் ஒழுற்கமைத்து பகுப்பாய்வு செய்து ஒன்றுடன் ஒன்று இணைத்து விபரண ஆய்வு முறையினூடாக ஆழமாக நோக்கப்படுகிறது. இந்த ஆய்வின் மூலமாக பேராயரின் பன்முக ஆளுமையினை அறியமுடியும். அத்துடன் அவரது இலக்கிய ஆய்வுப் பங்களிப்புக்களை விளங்கிக் கொள்ளலாம். மேலும் இதன் மூலம் ஈழத்து தமிழ் இலக்கிய உலகில் அவரது ஆளுமையினை மதிப்பீடு செய்யவும் முடியும். |
|