DSpace Repository

நம்மாழ்வார் பிரபந்தங்களில் விஷ்ணுபரத்துவம்

Show simple item record

dc.contributor.author Thashanthini, I.
dc.contributor.author Suganthini, S.
dc.date.accessioned 2024-03-22T06:40:52Z
dc.date.available 2024-03-22T06:40:52Z
dc.date.issued 2024
dc.identifier.uri http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/10278
dc.description.abstract வைதீகதருமத்தின் ஒரு பிரிவாகக் கருதப்படும் வைணவத்தின் பெருமைகளை உலகிற்கு அறிவித்தவர்களாக பன்னிரு ஆழ்வார்கள் காணப்படுகின்றனர். ஆவர்களில் ஒருவரான நம்மாழ்வாரால் பாடப்பட்ட பிரபந்தங்களாக திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி என்பன விளங்குகின்றன. இவற்றிலே விஷ்ணுவின் சிறப்பியல்புகள் தொடர்பிலான பல்வேறு செய்திகள் இனங்காணப்பட்டுள்ளன. நம்மாழ்வார் பிரபந்தங்களில் விஷ்ணுபரத்துவம் எனும் தலைப்பிலமைந்த இவ்வாய்வானது நம்மாழ்வார் பிரபந்தத்தில் விஷ்னுவின் பரத்துவத்தினை இனங்கண்டு அடையாளப்படுத்தலை நோக்கமாகக் கொண்டது. இந்து மக்களிடையே இழையோடியுள்ள விஷ்ணு வழிபாட்டினை வெளிப்படுத்தலை உபநோக்கமாகக் கொண்டு நிகழ்த்தப்படுகின்றது. வுpபரண ஆய்வுமுறை, வரலாற்று ஆய்வு முறை, பகுப்பாய்வு முறைகள் ஊடாக இவ்வாய்வு நிகழ்த்தப்பட்டுள்ளது. நம்மாழ்வார் தொடர்பிலான வரலாறு எனும் வகையில் அவர் வாழ்ந்த காலம், இவருக்கு வழங்கப்பட்ட பெயர்கள் அதற்கான காரணங்கள் என்பன தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. மேலும் இவர் இயற்றிய பிரபந்தங்களினது இலக்கிய வகைகள் அவற்றின் தொகைகள் போன்றன கூறப்பட்டுள்ளது. விஷ்ணுபரத்துவம் என்பது விஷ்ணுவின் சிறப்பியல்புகளையே குறித்து நிற்கின்றன. இவ்விறப்பியல்புகள் காரணமாகவே விஷ்ணுபகவானுக்கு பல நாமங்கள் அளிக்கப்பட்டள்ளன என்பதனை அறியமுடிகிறது. வுpஷ்ணுவின் வியாபகத்தன்மை என்பது குணம், செயல் என்பவற்றினை குறித்து நிற்கிறது. விஷ்ணுவின் திருக்கல்யாணக்குணங்கள் எண்ணிறந்தவை. அவற்றுள் சிறப்பாக ஆறு திருக்கல்யாணக்குணங்கள் பற்றிக் கூறப்பட்டுள்ளது. அதனையடுத்து இறைவனின் ஐந்து நிலைகள் பற்றியும் அவற்றிலே இறைவனின் பண்பு எத்தகையது என்பதனை நம்மாழ்வார் பாடல்கள் மூலம் இந்த ஆய்வு அறியமுற்பட்டுள்ளது. en_US
dc.language.iso other en_US
dc.publisher University of Jaffna en_US
dc.subject நம்மாழ்வார் en_US
dc.subject விஷ்ணுபரத்துவம் en_US
dc.subject அவதாரம் en_US
dc.subject வியாபகம் en_US
dc.title நம்மாழ்வார் பிரபந்தங்களில் விஷ்ணுபரத்துவம் en_US
dc.type Conference paper en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record